ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

சத்துரு மாரணம்-அகத்தியர்

செயமாகச் சத்துரு மாரணத்தை கேளு
செப்புகிறேன் யவசிவய வென்று மாறு
பயமாகிச் சத்துருவும் மயங்கிப் போவான்
...
பஞ்சதனிற் அக்கினிபோல் பற்றும் பற்றும்
நயமாக மாறி நிற்பதாரை யென்றால்
நல்லோரை தூஷணிப்போர் நன்மையில்லோர்
மயமான சீவசெந்தை அழித்தோர் தன்னை
மாரணிப்பாய் புலத்தியனே மனதிற்காணே.

-அமுத கலைஞானம்
விளக்கம்:
                                            எதிரி மாரணதை சொல்கிறேன் கேள்,முதலில் "யவசிவய" என்னும்
இம்மந்திரத்தை 1008 உரு செபித்து சித்திசெய்து கொள்ளவும்.பின்னர் தேவை ஏற்படும் போது உன் முச்சை நன்றாக இழுத்தடக்கி எதிரியை பார்த்துஇம்மந்திரத்தை மனதால் செபித்தால் சத்துரு மயங்கிப் போவான். பஞ்சில் தீ பற்றுவது போல் இம்மந்திரத்தின் ஆற்றல் அவனை மாரணித்து விடும்.இம்மந்திரத்தை யாரிடம் பிரயோகிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை அவமதிப்பவர்கள், தீயோர்கள், உயிர்களை அழித்த பாவிகளிடம் பிரயோகிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
                                                                                                                                                    -பகிர்வில் அறிவு மையம்
                                                                                                  -நன்றி-.

3 கருத்துகள்:

 1. அன்புள்ள நண்பரே ,
  1.இம்மந்திரத்தை எத்திசை நோக்கி அமர்ந்து செபிக்க வேண்டும் ?
  2.எதன் மீது அமர்ந்து செபிக்க வேண்டும் ?
  3.மேலும் மேலதிக தகவல்களை அருள வேண்டுகிறேன்.
  என்றும் அன்புடன் ,
  அர்ஜுனன்.

  பதிலளிநீக்கு
 2. ஐயா நான் மாந்திரீகம் கற்றுக்கெண்டு இருக்கின்றேன் ஆகவே மாந்திரீக புத்தகம் தேவை கிடைக்குமா?my no9488886717.rameshdashinaath@Gmail.com please your contact number?

  பதிலளிநீக்கு
 3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு