செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

அகத்தியர் குறுமுனியா - குருமுனியா ???


அகத்தியர் தனது பெருநூல் காவியத்தில் தமிழ்ச் சங்கத்தினைச் சேர்ந்தோர் அனைவரும் தன்னுடைய நூலைப்பாராட்டி தமக்கு குருமுனி என்று பட்டம் கொடுத்ததாகக் கூறுகிறார். அதைப் பற்றிய பாடல் இதோ-
"சீரேதான் சங்கத்தார் எல்லாங்கூடி
சிறப்புடனே அரங்கேற்றஞ் செய்துமேதான்
தீரேதானகஸ்தியர்க்கு குருபட்டந்தான்
திகழாகத் தான்கொடுத்தார் சித்தர்தானே,

தானான குருமுனியா ரென்று சொல்லி
தன்மையுள்ள சங்கத்தாரெல்லாருந்தான்
கோனான குருவணக்கம் மிகவும்கூறி
குவலத்தி லின்னூல்போல் யார்தான்செய்வார்
பானான பராபரியார் கடாட்சத்தாலே
பாடிவைத்த பெருநூலாங் காவியந்தான்
தேனான மனோன்மணியாள் காமரூபி
தேற்றமுட னாசீர்மஞ்செய்தார்காணே.

                   
                         -அகத்தியர் பெருநூல் காவியம்-(700வது பாடல்)
               
இது இப்படி இருக்க சில சிறுமதியாளர்கள் குருமுனி என்பதை குறுமுனி என்றாக்கி அகத்தியர் குட்டையான் உருவம் படைத்தவர் என்று கதை கட்டி விட்டனர்.

அகத்தியர் பெருநூல் காவியத்தில் தமக்குக் குருமுனி என்ற பட்டம் கிடத்த வரலாற்றைக் கூறியிராவிட்டால் அவரை குறுமுனி என்றும் குட்டையான உருவம் உடையவர் என்றும் நாமும் எண்ணத்தோன்றும். இதை தமிழ் கற்கும் ஒவ்வொருவரும் மனதில் கொண்டு அகத்தியரை குறுமுனியாக்காமல் குருமுனியாக வைத்து வணங்க வேண்டும்.
                                                                                       -  பகிர்வில் கலைச்செல்வன்.
                                             
                                                                  -நன்றி-

1 கருத்து:

  1. தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
    தங்களின் மின்னஞ்சல் தெரிவித்தால் தங்களிடம் எனது தனிப்பட்ட சந்தேகங்களை கேட்க வசதியாக இருக்கும்.
    எனது மின்னஞ்சல் முகவரி
    v.devi3@gmail.com

    நன்றி
    வனஜா

    பதிலளிநீக்கு