ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!

தட வர்மம்

"மைந்தா அங்குலம் நாலின்கீழே
   செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
  பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
   தடவர்மம் தட்டென உயர்ந்து
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
    உய்யவே உளைச்சலது காணும்"

                                          - அகத்தியர்

நமது கால் பெருவிரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் நடுவில்
இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி
இருக்கிறது.

இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது
சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி,
 இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர
உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க
எதிரியால் முடியாது போய்விடும்.

முடக்கு வர்மம்

"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"

                                         - அகத்தியர்

இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில்,
அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில்
அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன், அந்த இடத்தில்
அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால்
அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க
முடியாத நிலை ஏற்படும். அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு
அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால்
நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்

தட்சணக் கால வர்மம்

"போகுமடா மைந்தா வெள்ளையது
   உள்ளங்கையில் பொருந்திநின்ற
தட்சணைக் காலம் சொல்வேன்
  ஆகுமடாஇந்தவர்மம் கொண்டால்கேளு
உயிரது பிரியும் நேரமாகும் புண்ணியனே
   மாத்திரையது மீறிரைக்கால் மரணமாகும்"

                                                              - அகத்தியர்

நமது உள்ளங்கையின் நடுவிலிருந்து சற்று மேலே விரல்களை
நாபிப் பிடித்தால் ஆள்காட்டி விரலுக்கு அடுத்தவிரலான கட்டை
விரல் எந்த இடத்தில் நிலைத்திருக்கின்றதோ அந்த இடமே
தட்சணக் கால வர்மப் புள்ளியாகும். இந்த வர்மத்தில் முக்கால்
மாத்திரையோ அல்லது முழு மாத்திரை அளவோ தாக்கப்படுமானால்
தாக்குதலுக்கு உள்ளாபவர் மரணமடைவார்.              
 இந்தத் தட்சணக் கால வர்மத் தாக்குதலை இனி இயலாது என்கிற இறுதிக்கட்டதிலேயே பயன்படுத்த வேண்டும்.

1 கருத்து:

  1. அய்யா வணக்கம் 16 முறை தானே மந்திரம் செல்ல வேண்டும் அநது என்ன 15 முறை?

    பதிலளிநீக்கு