ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உரோம விருட்சம்

உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு.  இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும். அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும். இதைக்கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம்(35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும். இதை வாயில் போட்டுக்கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு கற்பம் இதனால் நரை,திரை,முப்பு,பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக்கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்துவிழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்துவிட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது. சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன. மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன.
                                                                                                                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் 
                                                                   - அறிவுமையம் -

4 கருத்துகள்:

  1. புடம் போடுதல் என்றால் என்ன ?
    விடை தாருங்கள் சகோதரரே

    பதிலளிநீக்கு
  2. ரோம விருட்சம் என்று ஒன்று உண்மையில் உண்டா?

    பதிலளிநீக்கு
  3. இப்படி செய்யும் குளிகை சொரூப குளிகை எனப்படும் திருமூலர் தொடையில் பதித்திருந்தாரென இப்போதுதான் அறிகிறேன். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு