புதன், 5 செப்டம்பர், 2012

ஜல தம்பனம் - நீர் மேல் நடக்கும் சித்து


சூரியனை அரவுதொடும் செவ்வாய் வாரம்
 தீண்டயிலே கொடுவேலி நத்தைச் சூரி

வீரியமாய் காப்புக் கட்டி பிடுங்கி வந்து
வித்துவேசணி நமச்சிவாய வென்று

காரியமாய்க் குளிசமிட்டுச் சூரி வேரைக்
கட்டியே வாரி தனில் நடந்து பாரே
வீரியமும் வீழாது சலம் தம்பிக்கும்
விள்ளாதே கொடிவேலி விளம்புவேனே
                                                 
                                         -மச்சமுனி பெருநூல் காவியம் -800

பொருள் :
சூரிய கிரகணம்,செவ்வாய்க் கிழமை வரும் நாளன்று கிரகணம்
பிடிக்கும் போது "கொடிவேலி" "நத்தைச் சூரி" இரண்டு மூலிகை
களை காப்புக் கட்டி,"ஓம் வித்து வேசணி நமச்சிவாய" என்று 108உரு
செபித்து இரண்டு மூலிகைகளின் வேர்களையும் சேர்த்துக்கட்டி ஒரு
செப்பு தாயத்தினில் அடைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரி, குளம், கடல் போன்றவைகளில் உள்ள தண்ணீரின் மேல் நடக்கலாம் என்றும் அந்த நீர்
உறைந்து ஸ்தம்பித்து விடும் என்றும்  மச்சமுனி பெருநூல் காவியம் 800ல்
மச்ச முனிவர் குறிப்பிடுகின்றார்.

                                     பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

1 கருத்து: