புதன், 5 செப்டம்பர், 2012

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு


முதலில் குருவினை மனதால் துதித்து பின்பு மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும். முதலில் குறைந்தது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உபயோகிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள்  சித்தி
யாகும் . பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 108 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்கும். இம்மந்திரங்கள் அனைத்தும் கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.


தத்புருஷமுகம்-மந்திரங்கள்:

'நமசிவாய' என உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகும்.

"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டும்.

"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

அகோரமுகம்-மந்திரங்கள்:

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசால வசால சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவமுகம்-மந்திரங்கள்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டும்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியும்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்

ஈசானமுகம்-மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க
சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

21 கருத்துகள்:

  1. தத்புருஷமுகம்

    அகோரமுகம்

    சத்யோசாத

    வாமதேவமுக

    appadi endral enna konjam vilakkamaka sollungal pls

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தத்புருஷமுகம்

      அகோரமுகம்

      சத்யோசாத

      வாமதேவமுக
      ஈசானமுகம்
      என்பது சிவனின் ஐந்துமுகங்கள் ஆகும்.இது ஐந்து திசைகளை நோக்கிதாக இருக்கும்,சிவனின் மந்திரத்தை மையமாக வைத்து ஐந்துமுகமாக பிரித்து ஒருமுகத்திற்க்கு 25 மந்திரங்கள் வீதம் 5 முகங்களுக்கு 125 மந்திரங்களை கருவூரார் அருளியுள்ளார்.இதற்கு சமமான மந்திரம் இல்லை என்கிறார்.

      நீக்கு
  2. "ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.


    nam sellama ellai manathai selutha lama? puriyavillai pls?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடலை எந்த இடத்திலும் வைத்து விட்டு சூட்சமமாய் ஆவிஉடலுடன் நினைத்த இடத்திற்க்கு சென்றுவருதல் ஆகும்.

      நீக்கு
  3. Hi Kalai Selvan,

    Your initiative is very much appreciated.
    Could you please share more information on this(Karuvuraar balathirattu)? Especially
    to cure common diseases, studies, etc..
    It will be more helpful.

    I wish you all success.

    Thanks!
    Krish.

    பதிலளிநீக்கு
  4. அன்பரே,
    1. இம் மந்திரங்களை எப்படி ? எங்கு ? செய்ய வேண்டும் ?
    2. சித்தி செய்யும் முறையினை தெளிவாக விளக்கினால் நன்றாய் இருக்கும்.
    3. மந்திரங்களை சித்தி செய்யும் போது மனதில் செபிக்க வேண்டுமா ? அல்லது வாய்விட்டு செபிக்க வேண்டுமா ?
    தங்களின் பதில்களுக்காக காத்திருக்கும் நண்பன் ,
    S.அர்ஜுனன்.

    பதிலளிநீக்கு
  5. 1)ஒரு தூய்மையான தனி இடத்தில் அமர்ந்து காலை வேளையில் 4 முதல் 6 மணிக்குள்ளாக கிழக்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.
    2)வெள்ளாட்டு தோலில் அமர்ந்து செய்ய வேண்டும்,அது கிடைக்காவிட்டால் கம்பளி விரித்து அதில் அமர்ந்து செபிக்க சித்தியாகும்.
    3) மனதிற்குள்ளாக செபிக்கவும்.
    -நன்றி -

    பதிலளிநீக்கு
  6. ₹ தங்கள் பதில்களுக்கு நன்றிகள் ₹
    1.மந்திரங்களை செபிப்பதற்கு முன் கட்டு மந்திரம் போட வேண்டுமா ?
    2.போட வேண்டுமென்றால் எப்படி போடுவது ?
    3.போடாவிடில் என்ன விளைவுகள் நேரிடும் ?
    தங்களின் பதில்களுக்காக காத்திருக்கும் நண்பன் ,
    S.அர்ஜுனன்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் அய்யா ..
    கல்யாணம் ஆனவர்கள் இந்த மந்திரங்கள் சொன்னால் அது பலிக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன சுத்தியுடன் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மந்திரம் பலிக்கும்.

      நீக்கு
  8. ஐயா
    மந்திரங்கள் சித்தியானதை எப்படி உணர வேண்டும்? ??

    ஒரு ஆயிரம் ஒரு தடவை செய்தாலே போதுமானதா??

    பதிலளிநீக்கு
  9. மந்திரம் 1008 உரு சரியாக ஜெபித்து நிறுத்த வேண்டுமா 108 மணியால் 10 முறை உருட்டினால் 1080 ஆச்சு

    பதிலளிநீக்கு
  10. மந்திரம் 1008 உரு சரியாக ஜெபித்து நிறுத்த வேண்டுமா 108 மணியால் 10 முறை உருட்டினால் 1080 ஆச்சு

    பதிலளிநீக்கு
  11. மூலமந்திரங்கள் என்ன? என்ன?

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. கருவூரார் திருவடிகளே சரணம் ! அனைத்து கேள்விக்கும் தெளிவான பதிலை தந்து உள்ளீர்கள் எங்களின் கன்னித் தமிழில் !
    மிக்க நன்றியுடன் என்றென்றும் ஐயா

    பதிலளிநீக்கு
  14. தமிழ்வாழ்க தமிழ்
    நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி
    நூறுஆண்டு வாழ்ந்து இச்செவையை
    தொடர்ந்து செய்ய வேண்டும். நன்றி

    பதிலளிநீக்கு