ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ராஜ மாதங்கி மந்திரம்


மாதங்கி மந்திரம்

"ஓம் ஹரீம் ஸ்ரீம் கிலீம் சௌம் நமோ பகவதி மாதங்கி மாதங்க குலவீர்த்தி கன்னிகா கிலீம் மமவசம் குருகுரு சுவாகா" -இம்மந்திரத்தை நாளொன்றுக்கு
 1008-உரு வீதம் 22 நாட்கள் செபிக்க மந்திரம் சித்தியாகும்.                                                   
                                                            

                                                                                 இதற்கு பூசை முறை

அவல்கடலை, சுண்டல், தேங்காய், பழம், பால் முதலிய பூசை சாமாங்களை வைத்து மந்திரத்தை செபிக்க வேண்டும். இதனால் பசு,பூமி, தனம், தானியம், பெண், புத்திரர், செல்வம், வாகனம் முதலிய சர்வசௌபாக்கியம் உண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.
 
                                                                   பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

புதன், 26 டிசம்பர், 2012

உச்சிஷ்ட சாமுண்டி மந்திரம்


உச்சிஷ்ட சாமுண்டி
                                                           உச்சிஷ்ட சாமுண்டி மந்திரம்

"ஓம் ஹரீம் பகவதி உச்சிஷ்ட சாமுண்டி வீரமாகாளி பைரவி
ரம் ரம் டம் டம் நம் நம் மராய் மராய் உச்சாட உச்சாட
ஹரீம் ஹீம்பட் சுவாஹா"

இந்த மகாமந்திரத்தை நல்ல தைரியம் உள்ளவர்கள் மட்டும்
செபம் செய்ய வேண்டும். இதை நாளொன்றுக்கு 1008-உரு வீதம்
எட்டு நாட்களுக்கு செபம் செய்ய வேண்டும்.

இதை செய்யும் போது ஓரு மண்டை ஓட்டை எடுத்து சுத்தம்
செய்து மஞ்சள், குங்குமம் வைத்து இடது கையில்
வைத்துக்கொண்டு தன்னை சிவவடிவமாக பாவித்து செபம்
செய்து சேவல் பலி தர வேண்டும். மந்திரம் செபித்துவரும்
எட்டாவது நாள் இரவில் தேவி அகோர வடிவத்துடன் கையில்
மலைகளை கையில் தூக்கி எறிந்து பந்து ஆடுவது போல்
விளையாடி வருவாள். வாயில்  நெருப்புப்பொறி பறக்கும்,
சூரியனை போல் ஒளியுண்டாகும், இடி மின்னலுடன் பூமி அதிரும். 
 பயப்படாமல் தாயே என்று வணங்கி விழுந்து கண்ணீரால்
பாதத்தை கழுவி நின்றால் புன்முறுவலுடன் என்ன
வேண்டுமென்று பரிவுடன் கேட்கும், நாம் கேட்டவரத்தை கொடுக்கும்.


இதை சித்தி செய்தவர்களுக்கு சத்துருக்கள்(எதிரிகள்) மூன்று
உலகத்திலும் கிடையாது என்று மலையாள
மாந்திரீகத்தில் சொல்லப்பபடுள்ளது.

                                                      பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 21 டிசம்பர், 2012

சாயா புருஷ தரிசனம்-போகர்


           சாயா புருஷ தரிசனம் என்பது தன் நிழல் உருவத்தைத் தானே பார்ப்பதுவாகும்.
  அது எப்படி எனறால் பூமியில் மேடு பள்ளம் இல்லாத சமதரையில் காலை-8 மணிமுதல் 9 மணிக்குள்ளாக தனது நிழலைப் பார்த்தவாறு நிற்கவும், தனது கால் அடி 7-8-9 அடி தூரத்துக்கு தனது நிழல் படும்போது அந்நிழலை 1 நிமிடம் அல்லது 2 நிமிடம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும்.கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே தலையை நிமிர்த்தி சுத்தமான நீலவானத்தை பார்த்தால் அங்கே தனது உருவப்பிம்பம் தோன்றும்.   அது,


*பொன்னிறமாக தெரிந்தால் அதைப்பார்பவர்க்கு செல்வம் உண்டாகும்.

*வெண்மையாக தெரிந்தால் பிராண பயம் இல்லை, அயுள் வளரும்.

*கருமையாகத் தெரிந்தால் வியாதிகள் வரும்.
 
*அந்த உருவத்தில் கை,கால்கள் தெரியதிருந்தால் 3 மாதத்தில் மரணம் ஏற்படும்.

*தலையே இல்லாமல் தெரிந்தால் 1 மாதத்தில் மரணம் ஏற்படும்.

*மார்பில் துவாரம்(ஓட்டை)தெரிந்தால் 6 மாதத்தில் மரணமாவான்.

*உன் உருவ நிழலில் ஏதேனும் குறையாக தெரிந்தால் உனக்கு மரணம் ஏற்படுவது உறுதி.

மேலும் மனோன்மணியாள் சொரூபம் போல் உன் ரூபத்தை கண்டாயானால் இவ்வுலகில் நீ வெகுகாலம் இருப்பது உறுதி.

இதேபோல் பனிரெண்டு ஆண்டுகள் சாயாபுருஷ தரிசனத்தை கண்டால் உன் நிழல் உருவம் எப்போதும் உன்னை  பின்தொடர்ந்து நிற்கும், நீ தூங்கும்போதும் நடக்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும், ஒருவருடன் பேசும்போதும்,
 உண்மையாக உங்க்கு வருங்காலத்தை கூறும்.
உனக்கு வரும் நன்மை,தீமைகளை முன்பே சொல்லும், 

உண் உடம்பு கல்தூண் போலாகும். வையகத்தில் கோடிக்காலம் இருப்பது உறுதி.
நாறும் உடல் அழியாது கோடிக்காலம் இவ்வுலகில் சமாதியில் இருக்கலாம்.

சாயா புருஷ தரிசனத்தை கண்டவர்க்கு எல்லாம் சித்தியாகும், அஷ்டமா சித்திகளை அடைவதில் ஐயமில்லை. பனிரெண்டு ஆண்டுகள் இதை கண்டவர்க்கு மட்டுமே இது சித்தியாகும், அப்படி காணாதவர்க்கு விட்டகுறை (பூர்வ ஜென்ம புண்ணியம்)

இருந்தாலும் இது வாய்க்காது.

மேலும் இத்தரிசனத்தை கண்டவர்கள் தானும் ஒரு சித்தனைப்போல் மலைகளில் இருக்கலாம். அங்குள்ள தேவரிஷிககளை காணலாம். இந்த முறையை தென் திசையில் வாழ்ந்த அகத்தியர் தனக்கு சொன்னதாக கூறுகிறார் போகர் தனது போகர்ஏழாயிரம் என்னும் நூலில்.

                                                                                   நன்றி                                                  
                                                 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

சனி, 8 டிசம்பர், 2012

அந்தரங்க மர்மம் - கோரக்கர்பெண்ணுடன் உறவு கொள்ளும் போது விந்து விணாகாமல் இருக்கவும்,உயிர்சத்தியை தன்னுள் தக்க வைத்துக்கொள்ளவும் சிறந்ததொரு முறையை அகத்தியர் கூறியுள்ளார். இதே முறையை மறைப்பில்லாமல் கோரக்கரும் தனது சந்திரரேகை என்னும் நூலில் கூறியிருப்பது ஆய்வுக்குரியதாகும். இன்று அறிவியல் வளர்ச்சியின் காரணமாய் புணர்ச்சிக்கென்று எத்தனையே மருந்துகள் வந்திருந்தாலும் அவைகள் உறவு நேரத்தை அதிகரிக்குமே தவிர விந்துவை நிறுத்தாது மேலும் அவைகளால் உடலுக்கு பல கேடுகள் உண்டாகும். எந்தவொரு பக்கவிளைவும் இல்லாத வகையில் விந்துவை உள்நிறுத்தி உயிர்சக்தியை தக்க வைத்துக்கொள்ள நமது சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்த முறைகளை அருளியுள்ளனர். அதைப்பற்றிய அதை பற்றிய ஓர் விளக்கம்.

கலவியல் தம்பனம்- அகத்தியர்


"காமப்பா கலவியிலே தம்பனத்தைக் கேளு
 கட்டாக நிஷ்டைமுறை கருத்தில் வையே
வையப்பா வாசிதனை மூலத்தூட்டி
 மகத்தான மூலமதால் ரேசகத்தை பற்றி
செய்யப்பா பூரகத்தில் கும்பகத்தில் நின்று
 செபித்திடுவாய் வசியசிவ வென்று மாறி
பய்யப்பா பாவையர்மேல் ஆசைகொண்டால்
 பதறாது விந்துவது செயமாய் நிற்கும்
மெய்யப்பா இம்மொழியை உலகத்தோர்க்கு
 விள்ளாதே குற்றம்வரும் செயமாய் நில்லே".

                                              - அகத்தியர் கலைஞானம் 1200
பொருள்:

கலவியல் தம்பனத்தை சொல்கிறேன் கேள், மனதை ஓர் நிலைபடுத்தி புருவமையத்தில் குவித்து முச்சை நன்கு இழுத்து அடக்கிக்கொண்டு வசியசிவ என்பதை மாறி செபிக்கவும் அதாவது "ஓம் சிவயவசி" என்று 100-உரு மனதினுள் செபித்து விட்டு பின்பு பெண்களை புணர்ந்தால் விந்து விழாது தம்பித்துக்கொள்ளும்.

இது உண்மை, இதை உலக மக்களுக்கு சொல்லாதே ஏனென்றால் இதனை தவறான் வழிக்கு பயன்படுத்தி விடுவார்கள் மேலும் பல குற்றங்கள் இதனால் நடக்கும் என்கிறார் அகத்தியர்.

அந்தரங்க மர்மம் - கோரக்கர்

"பித்தர்களே ஓதிடுவேன் பெருமை கேளீர்
  பேய்போல திரியாதீர் பிதற்றல் வேண்டாம்
உத்தமியாள் தன்னுடனே புணரும் போது
 உன்னுடைய இந்திரியம் விட்டேங்காதே
பத்தினியாள் இச்சைகாமம் பருகத் தாக்கி
 மதனமிட்டு கொண்டிடுவாய் பாழ்போகாதே.

போகத்தில் இந்திரியம் பொங்கா துய்யா
 புத்தியுடன் புகன்றிடுவேன் அறிந்து கொள்வீர்
பாகமுடன் பரிஎன்ற வாசி பூட்டிப்
 பக்குவமாய் ஓம்சிவய வசிஎன்றே
ஏகமனம் பேசாது நூறு செப்பி
 எகராமல் கும்பித்துப் புணர்வாயானால்
தாகமுறும் மாமயில் ஆசை நீங்கும்
 தங்கிவிடும் உன்விந்திந்த விதமுமாமே.

இந்தவித முலகோருக் கியல்பைக் காட்ட
 எடுத்தணைத்தார் மூவர்களும் பெண்ணைத்தானே
விந்து நிலையா மூட மாந்தர்
 விபரிதமாய் வீண்பேச்சுப் பேசிக்கெட்டார்
அந்தரங்க மர்மமிதை யறியாமற்றான்
 ஆருலகில் அரிவையரை ஆகாதென்றார்".
                                               
                                            -கோரக்கர் சந்திரரேகை
பொருள்:       

பித்தர்களே உங்களுக்கு ஒரு பெருமை மிகுந்த முறையை சொல்கிறேன் கேளுங்கள், காம எண்ணத்தோடு கண்ட பெண்களை தேடி திரியாதீர்கள்,பெண்களை பார்த்து காம புலம்பல் புலம்பாதீர்கள், உங்கள் மனைவியிடம் மட்டும் உறவு கொள்ளுங்கள், அப்படி உறவு கொள்ளும் போது உங்கள் விந்து சக்தியை இழந்து விட்டு ஏங்காதீர்கள், மனைவியாய் இருந்தாலும் அளவுக்கு மீறி உறவு கொண்டு வாழ்க்கையை பாழாக்கி விடாதீர்கள்.
போகத்தின்போது விந்து வெளியேறி வீணாகாமல் இருப்பதற்க்காக ஓரு முறையை சொல்கிறேன், இதை புத்தியுடன் பின்பற்றுங்கள். எப்போதும் குதிரைபோல் ஓடிக்கொண்டிருக்கும் மூச்சை மெதுவாக இழுத்தடக்கிக் வைத்துக்கொண்டு
"ஓம் சிவயவசி" என்ற மந்திரத்தை மன ஓர்நிலையோடு மனதினுள்
100- செபித்து விட்டு பின்னர் பெண்களுடன் உறவு கொண்டால் அப்பெண்ணின் காமஆசையும்,காம ஏக்கமும் எந்த அளவு இருந்தாலும் அது தணியும். நீ எவ்வளவு நேரம் உறவு கொண்டாலும் உன் விந்து வெளியேறாது உள்ளேயே தங்கி விடும்.

இந்த முறையை உலகத்திற்கு காட்டவே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர்களும் பெண்ணை அணைத்தபடி காட்சி தருகிறார்கள்.அதாவது பெண்ணுடன் உறவு கொண்டாலும் தெய்வதன்மையை இழக்காமல் இருப்பதை இது காட்டும்.
விந்துவை அடக்கமுடியாத மூடமனிதர்கள் வீண் பேச்சுக்களை பேசியே கெட்டுப்போனார்கள், இந்த அந்தரங்க மர்மத்தை அறியாமல்தான் இவர்கள் பெண்களை ஆகாதவர்கள் என்கிறார்கள்.என்கிறார் கோரக்கர்.
                                                                                
                                                                             பகிர்வில்                                                               
                                                      S.கலைச்செல்வன் M.A
               -

சனி, 1 டிசம்பர், 2012

கணபதி வசிய மந்திரம் - அகத்தியர்


நேரப்பா தானிருந்து அட்டாங்கயோகம்
நேர்மையுடன் பார்ப்பதற்க்கு கருவைக்கேளு
காரப்பா கருணைவளர் கணபதியின் தியானம்
கருணையுள்ள வட்டமதில் ஓங்காரஞ்சாத்தி
சேரப்பா ஓங்காரந் தன்னிலேதான்
ஸ்ரீயென்று கணபதியின் பீசஞ்சாத்தே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
சகல உபசாரமதாய்ப் பூசைபண்ணி
போத்திநன்றாய்ப் பூரணத்தில் மனதைநாட்டி
புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேள்
பார்த்திபனே ஓம் நமோகுரு கிலியும்
ஸ்ரீகுரு கணபதி சுவாகாவென்று
புத்தியுடன் பதினாறு உறுவே செய்தால்
நேத்திரத்தின் பேரொளிபோல் மூலநாயன்
நிச்சயமாய் உனதுவசம் வசியமாமே.

ஆமப்பா கணபதியை வசியம்பண்ணி
அதன்பிறகு அஷ்டாங்க யோகம்பார்த்தால்
தாமப்பா தன்வசமா யஷ்டகர்மம்
சச்சிதா னந்த பூரணத்தினாலே
ஓமப்பா அறுபத்து நாலுசித்தும்
உண்மையுடன் தானவனாய்த் தானேசெய்வாய் .
                                      

                                                அகத்தியர் பரிபூரணம் 1200

 
பொருள்:
வசியம் முதல் மாரணம் வரையிலான எட்டுவகை கர்மங்களையும் சித்திசெய்வதற்க்கு ஒரு வழி சொல்கிறேன் கேள்,
அது என்னவென்றால் அது கணபதியின் தியானமாகும். அதை செய்யும் முறை யாதனில் முதலில் ஒரு செப்புத்தகட்டில் ஒரு வட்டம் போட்டு அதனுள் ஓம் என்று எழுதி அந்த ஓம் என்பதற்க்குள் ஸ்ரீ என்று எழுதவும். இந்த சக்கரத்தை கணபதியின் முன்னே வைத்து பூசை பொருட்களும் வைத்து முறையாக பூசை செய்து பின்பு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவ நடுமையத்தில் மனதை நாட்டி "ஓம் நமோ குரு கிலியும் ஸ்ரீகுரு கணபதி சுவாகா" என்ற மந்திரத்தை பதினாறு உரு செபித்தால்  கணபதி ஒளி வடிவில் உனக்கு காட்சி தந்து உனக்கு வசியமாவார். அப்படி கணபதியை வசியம் செய்தவர்கள் அஷ்டகர்மயோகம் செய்தால் அது அவருக்கு சித்தியாகும். மேலும் அறுபத்து நான்கு சித்துக்களும் செய்யும் வல்லமை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

                                              பகிர்வில் S. கலைச்செல்வன் M.A