ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

எதிரியை செயலிழக்க வைக்கும் வர்ம முறைகள்!

தட வர்மம்

"மைந்தா அங்குலம் நாலின்கீழே
   செயலான பெருவிரல் இடையில்தானே
பய்யவே தடவர்மம் அதற்க்குப் பேரு
  பாங்காய்ச் சுவடது பதித்த வலுவுடனே
அல்லது களியாலோ குத்தினிக்கால்
   தடவர்மம் தட்டென உயர்ந்து
பாங்காய் ரத்தமது கட்டிக் கொண்டு
    உய்யவே உளைச்சலது காணும்"

                                          - அகத்தியர்

நமது கால் பெருவிரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் நடுவில்
இருக்கும் சதைப் பிடிப்பான பகுதியில்தான் தட வர்மப் புள்ளி
இருக்கிறது.

இந்த வர்ம இடத்தில் காலின் பின் குதியாலொ அல்லது
சிலம்பின் முனையாலோ தாக்குவதால் அந்த இடம் வீங்கி,
 இரத்தம் கட்டிக்கொள்வதுடன் உடல் முலுதும் பயங்கர
உளைச்சலைக் கொடுக்கும். இதனால் பதில் தாக்குதல் தாக்க
எதிரியால் முடியாது போய்விடும்.

முடக்கு வர்மம்

"பாரப்பா முட்டியது பின் நேர் பற்றிய
வர்மமடா முடக்கு இதன்
பெயர்தானே இதனில் தாக்கம்
கண்டால் காலது மடங்காதடா
சக்தி இழந்து திமிர் போலாகி
விறைக்குமடா மைந்தா
மாத்திரையது மீறினாக்கால்
நிரந்தர முடவனாவான் பாரே"

                                         - அகத்தியர்

இந்த வர்மப் புள்ளியானது காலின் முட்டிக்கு நேரே பின்புறத்தில்,
அதாவது கால் மடக்குமிடத்தில் உள்ளது. இந்த இடத்தில்
அடிபட்டால் அடிபட்ட இடம் வீங்குவதுடன், அந்த இடத்தில்
அதிக வலியும் ஏற்படும், இந்த வர்மா புள்ளியில் அடிபடுவதால்
அந்த இடத்தின் தசை விறைப்படையும் அதனால் காலை மடக்க
முடியாத நிலை ஏற்படும். அந்த வர்மத்தில் முழு மாத்திரை அளவு
அடி பட்டால் அடிபட்டவன் வாழ்நாள் முழுதும் அந்தக் காலால்
நடக்க முடியாத முடவன் ஆகிவிடுவான் என்கிறார்

தட்சணக் கால வர்மம்

"போகுமடா மைந்தா வெள்ளையது
   உள்ளங்கையில் பொருந்திநின்ற
தட்சணைக் காலம் சொல்வேன்
  ஆகுமடாஇந்தவர்மம் கொண்டால்கேளு
உயிரது பிரியும் நேரமாகும் புண்ணியனே
   மாத்திரையது மீறிரைக்கால் மரணமாகும்"

                                                              - அகத்தியர்

நமது உள்ளங்கையின் நடுவிலிருந்து சற்று மேலே விரல்களை
நாபிப் பிடித்தால் ஆள்காட்டி விரலுக்கு அடுத்தவிரலான கட்டை
விரல் எந்த இடத்தில் நிலைத்திருக்கின்றதோ அந்த இடமே
தட்சணக் கால வர்மப் புள்ளியாகும். இந்த வர்மத்தில் முக்கால்
மாத்திரையோ அல்லது முழு மாத்திரை அளவோ தாக்கப்படுமானால்
தாக்குதலுக்கு உள்ளாபவர் மரணமடைவார்.              
 இந்தத் தட்சணக் கால வர்மத் தாக்குதலை இனி இயலாது என்கிற இறுதிக்கட்டதிலேயே பயன்படுத்த வேண்டும்.

சொத்தைப்பல், பல்வலி, பல் ஆட்டம் குணமாக

நாயுருவி வேர் கொண்டு வந்து 'பிரஷ்' போல் தட்டி பல் துலக்க வேண்டும். இவ்விதம் சில நாட்கள் துலக்கி வந்தால் பல்வலி,  பல் ஆட்டம்,  சொத்தைப்பல் இவை நீங்கும்.  பல் வெண்மையாகவும்,  கெட்டியாகவும்,  ஈறுகளுக்கு அதிக வெண்மையும் தரும்.

சக்தி வசியம்

பூச நட்சத்திரம் வரும் வெள்ளிகிழமை தினத்தில் விஷ்னுகிரந்தி செடிக்கு காப்பு கட்டி பொங்கலிட்டு பூஜை செய்து வேர் அறாமல் பிடுங்கி குளிசத்தில்(தாயத்தில்) அடைத்து வெள்ளை புஸ்பத்தினால் அலங்காரம் செய்து மூல மந்திரத்தை 1008 உரு கொடுத்து குளிசத்தை கட்டிகொள்ள ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, பூதம் எல்லாம் விலகும்.

                                                                 

 

சக்தி மூல மந்திரம்
ஒம் இம் கம் ரம் ரங்சிங் ஆயி டாகினி மாகினி விஷ்ணு சகோதரி சர்வாணிதேவி பராசக்தி நமசி ஸ்வாஹா. 

நாய் கடிக்காதிருக்க ஜாலம்

நாயுருவி இலை, எருக்கன் இலை, எருக்கன் மொக்கு - இம்மூன்றையும் கசக்கி உன்னை கடிக்கவரும் நாய் முகத்தில் எரிந்தால் அதை முகர்ந்தவுடன் அந்நாய் மயக்கம் கொள்ளும். இதைக் கண்டவர்கள் நாயின் வாயை கட்டிவிட்டார் என எண்ணுவார்கள்.

சுளுக்கு நீங்க மந்திரம்


" ஒம் சங்கு உருள, சக்கரம் உருள, சூலம்உருள, உரல்உருள, சமுத்திரம் ஏழும் உருண்டோடிப் போக சுவாகா" 
                                             
                        - என்று சுளுக்கு உள்ள இடத்தில் இரும்பு ஆயுதத்தால் 108 - உரு செபித்து மந்திரிக்கவும். இதனால் சுளுக்கு நிவர்த்தியாகும்.

செத்தவனை எழுப்ப மந்திரம்-கருவூரார்



ஆமப்பா செத்தவனை எழுப்பக்கேளு
அறைகிறேன் அட்சரத்தை அன்பாய்த்தானே
பாமப்பா பிறங் பிறங் சிவாயஓம் நம சுவாகா வென்னில்
பொன்றாது எழுவகையின் தோற்றப்பேரெல்லாம்
ஏமப்பா வாமத்தைப் பிரித்துச் சொன்னோம்
வேமப்பா உள்ளபடி திறந்து போட்டேன்
வெற்றியுள்ள புத்திரற்கு விரித்துச் சொல்லே.

                                                -கருவூரார் பலதிரட்டு-(வாமமுகம்)


விளக்கம்:
செத்தவனை எழுப்பக் கேள், " பிறங் பிறங் சிவாய ஓம் நம சுவாகா" என்ற மந்திரத்தால் செத்தவனைவனை உயிர்பிக்க முடியும் என்கிறார் கருவூரார்.

நெருப்பள்ளும் ஜாலம்




வேலிப்பருத்தியின் வேரும், கொழுந்தும் எடுத்தரைத்து கையில் பூசிக்கொண்டு கட்டை நெருப்பையும் கையில் அள்ளலாம் சுடாது.

சத்துரு மாரணம்-அகத்தியர்

செயமாகச் சத்துரு மாரணத்தை கேளு
செப்புகிறேன் யவசிவய வென்று மாறு
பயமாகிச் சத்துருவும் மயங்கிப் போவான்
...
பஞ்சதனிற் அக்கினிபோல் பற்றும் பற்றும்
நயமாக மாறி நிற்பதாரை யென்றால்
நல்லோரை தூஷணிப்போர் நன்மையில்லோர்
மயமான சீவசெந்தை அழித்தோர் தன்னை
மாரணிப்பாய் புலத்தியனே மனதிற்காணே.

-அமுத கலைஞானம்
விளக்கம்:
                                            எதிரி மாரணதை சொல்கிறேன் கேள்,முதலில் "யவசிவய" என்னும்
இம்மந்திரத்தை 1008 உரு செபித்து சித்திசெய்து கொள்ளவும்.பின்னர் தேவை ஏற்படும் போது உன் முச்சை நன்றாக இழுத்தடக்கி எதிரியை பார்த்துஇம்மந்திரத்தை மனதால் செபித்தால் சத்துரு மயங்கிப் போவான். பஞ்சில் தீ பற்றுவது போல் இம்மந்திரத்தின் ஆற்றல் அவனை மாரணித்து விடும்.இம்மந்திரத்தை யாரிடம் பிரயோகிக்க வேண்டும் என்றால் நல்லவர்களை அவமதிப்பவர்கள், தீயோர்கள், உயிர்களை அழித்த பாவிகளிடம் பிரயோகிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
                                                                                                                                                    -பகிர்வில் அறிவு மையம்
                                                                                                  -நன்றி-.