புதன், 5 செப்டம்பர், 2012

பேய் பில்லி சூனியம் நீங்க


மருதோன்றி(மருதாணி) விதைகளை இடித்து கரி நெருப்பின் மேல்
போட்டால் புகை வரும். அந்தப் புகையைப் பிடித்து வந்தால்
மனிதர்களுக்கு ஏற்படும் பில்லி, சூனியம், பேய், பூதம் நீங்கும் என்பர்.இன்றும் கேரளாவிலும், நம் நாட்டின் சில இடங்களிலும் பேய், பிசாசு,
 பில்லி, சூனியம் விரட்டுபவர்கள் இந்தப் புகையை உண்டாக்கி விரட்டி வருகின்றனர்.

அகத்தியர் அருளிய காட்டேரி வசிய மந்திரம்


'' அன்று காட்டேரி தேவதை தன்னை
அன்புடனே வசப்படுத்த மந்திரபீஜம்
இன்றுநீ ஓம் சிங் வங் டங் என்று லட்சம்
இசை பெறவே செபித்திட நற்சித்தியாமே
.

-12வது மந்திர காண்டம்(அகத்தியர் பன்னிருகாண்டம்)

விளக்கம்: அன்புடனே காட்டேரி தேவதையை வசியம் செய்ய மந்திரம்,

' ஓம் சிங் வங் டங் " என்று ஒரு லட்சம் முறை வடக்கு திசை அமர்ந்து செபிக்க மந்திரம் சித்தியாகும்.

எளிய மருத்துவ குறிப்புகள்

 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வர குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

ஜல தம்பனம் - நீர் மேல் நடக்கும் சித்து


சூரியனை அரவுதொடும் செவ்வாய் வாரம்
 தீண்டயிலே கொடுவேலி நத்தைச் சூரி

வீரியமாய் காப்புக் கட்டி பிடுங்கி வந்து
வித்துவேசணி நமச்சிவாய வென்று

காரியமாய்க் குளிசமிட்டுச் சூரி வேரைக்
கட்டியே வாரி தனில் நடந்து பாரே
வீரியமும் வீழாது சலம் தம்பிக்கும்
விள்ளாதே கொடிவேலி விளம்புவேனே
                                                 
                                         -மச்சமுனி பெருநூல் காவியம் -800

பொருள் :
சூரிய கிரகணம்,செவ்வாய்க் கிழமை வரும் நாளன்று கிரகணம்
பிடிக்கும் போது "கொடிவேலி" "நத்தைச் சூரி" இரண்டு மூலிகை
களை காப்புக் கட்டி,"ஓம் வித்து வேசணி நமச்சிவாய" என்று 108உரு
செபித்து இரண்டு மூலிகைகளின் வேர்களையும் சேர்த்துக்கட்டி ஒரு
செப்பு தாயத்தினில் அடைத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஏரி, குளம், கடல் போன்றவைகளில் உள்ள தண்ணீரின் மேல் நடக்கலாம் என்றும் அந்த நீர்
உறைந்து ஸ்தம்பித்து விடும் என்றும்  மச்சமுனி பெருநூல் காவியம் 800ல்
மச்ச முனிவர் குறிப்பிடுகின்றார்.

                                     பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

லாடன் வசிய மந்திரம்:


உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் கிழக்கு திசை நோக்கி
அமர்ந்து கொண்டு தேங்காய், பழம், பத்தி, சூடம், சர்க்கரை பொங்கல்
முதலிய பூசை பொருட்களை வைத்து மனதை ஓர் நிலைப்படுத்திக்
கொண்டு

 
லாடன் வசிய மந்திரம்


                                                               "ஓம் ரீரீரீரீ ராராரா டிங்டிங்டிங்டிங்" 

என்ற மந்திரத்தை 1000-உரு செபிக்க லாடமுனி வசியமாகும்.

லாடன் வசியத்தால் அறுபத்து நான்கு சித்துக்களையும் நம்மால்

செய்ய முடியும். உலகிலுள்ள பேய், பூதங்கள் எல்லாம் லாடமுனியை

வசியம் செய்தவரைக்கண்டால் அடங்கிப்போய்விடும் என அகத்தியர்

தனது மாந்திரீக காவியத்தில் கூறியுள்ளார்.

அஷ்டமாசித்துக்கள்


* அணிமா:

பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

* மஹிமா:

சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

* லஹிமா:

கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

*கரிமா:

இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

*பிராத்தி:

எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

*பிரகாமியம்:

வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

*ஈசத்துவம்:

ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

*வசித்துவம்:

ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.

திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

கருவூரார் அருளிய மந்திரங்கள்:கருவூரார் பலதிரட்டு


முதலில் குருவினை மனதால் துதித்து பின்பு மூலமந்திரத்தை மனதில் உச்சரிக்க வேண்டும். முதலில் குறைந்தது 1008 முறை விடாது உச்சரித்தல் அவசியம்.
எண்ணிக்கை கணக்கிற்காக ஜெப மாலைகளை உபயோகிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து உச்சரிக்கும் போது அந்த மந்திரங்கள்  சித்தி
யாகும் . பின் எப்போது தேவையேற்படுகிறதோ அச்சமயத்தில் தேவையான மந்திரங்களை 108 தடவை உச்சரிக்க மந்திரம் பலிக்கும். இம்மந்திரங்கள் அனைத்தும் கருவூரார் பலதிரட்டு என்னும் நூலில் சொல்லப்பட்டுள்ளது.


தத்புருஷமுகம்-மந்திரங்கள்:

'நமசிவாய' என உச்சரிக்க உச்சாடணம் ஏற்படும்.

"நமசிவாயம் லங்க நமசிவாய" என உச்சரிக்க மழை பெய்யுமென்கிறார்.

"அலங்கே நமசிவாய நமோ" என உச்சரிக்க புகழ் உண்டாகும்.

"அங் சிவாய நம" என உச்சரிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.

"ஊங்கிறியும் நமசிவாய நமா" என உச்சரிக்க மோட்சம் கிட்டும்.

"ஓம் நமசிவாய" என உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

அகோரமுகம்-மந்திரங்கள்:

"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.

"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.

"வசால வசால சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.

"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.

"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.

"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்

வாமதேவமுகம்-மந்திரங்கள்

"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டும்.

"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியும்.

"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.

"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.

சத்யோசாத மந்திரங்கள்

"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.

"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.

"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்

ஈசானமுகம்-மந்திரங்கள்

"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க
சிவதத்துவத்தை காணலாம்.

"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.

"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.

"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.

"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.

தீய சத்திகள்,கண் திருஷ்டி விலக,வியாபாரம் செழிக்க:


முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் கூட்டி அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள்,கண் திருஷ்டி,நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.

இராஜ வசிய மந்திரம்

இராஜ வசிய மந்திரம்
வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட பங்காளா, தக்ஷிணாமூர்த்தி,
துர்க்கா தேவதாயை நம என்று 1008 உரு செபிக்க ராஜவசியம் உண்டாகும்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அரசு சார்ந்தவர்களிடம்
வசியத்தை உண்டாக்குவதே ராஜவசியமாகும்.

சகல வியாதிகளுக்கும் மந்திரம்


ஓம், ரீங், அங், - இந்தப்படிக்கு விபூதியில் எழுதி ஆயிரத்தெட்டு
உரு ஜபித்து சூடன் கட்டியை அதன் மேலே வைத்துக் கொடுக்க
வியாதி தீரும். இது கை கண்டது. இதை நேயாளிகள் சிறிது
உள்ளுக்கு விழுங்கவும், பிறகு நெற்றியில் இட்டு கொள்ளச்செய்ய வேண்டும்

கணபதி மந்திரம்

ஓம் கணபதி ஐயும் கணபதி கிளியும் கணபதி ஸவ்வும் கணபதி வா, வா;                     சகல ஜனங்களும் போகங்களும் சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாக சுவாஹா. என்று 1008 உரு செபிக்க சகல லோக வசியம் உண்டாகும்.

தாய்ப்பால் பெருக....


போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒருகிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச்சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.


* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.


* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும்.  உணவு உட்கொள்வதற்கு முன்பாக,  இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

ஒற்றைத் தலைவலி நீங்க


முருங்கை இலையும், பூண்டும் சமஅளவு எடுத்து சிதைத்து அதிலிருந்து சாறெடுத்து அச்சாற்றை 5-6 துளிகள்வரை வலபக்கதலைவலிக்கு இடது முக்கிலும், இடபக்கதலைவலிக்கு வலது முக்கிலும் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

உடல் இளைத்தவருக்கு


பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

இருமல் தீர*இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

*கண்டங்கத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை அரைத்து உண்டு வர இருமல் குறையும்.

*திருநீற்றுபச்சிலை சாற்றில் மிளகு சேர்த்து ஊற வைத்து பொடி செய்து மூக்கில் உறிஞ்ச இருமல் குறையும்

*ஆடாதோடை இலை, சித்தரத்தை,காய்ந்த திராட்சை ஆகியவற்றை காய்ச்சி குடிக்க  இறைப்பு இருமல் குறையும்.

* துளசி, திப்பிலி இவற்றை காய்ச்சி குடிக்க இருமல் குறையும்.

* கருந்துளசி, மிளகு, அதிமதுரம், இவற்றை சாப்பிட சளி கட்டு நீங்கும்.

தலைவலி தீர1) அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்
2) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து காய்ச்சி சீசாவில் பத்திரப்படுத்தவும். இந்த தைலத்தை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பயத்தமாவு, அரப்புத்தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். இதனால் தலைவலியும்,பிரசவித்த பெண்களின் ஒற்றைத்தலைவலியும் தீரும்.
 3) வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

உடல் வலி தீர

1) வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து காலை-மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

2) மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம்,நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர உடல்வலி, அலுப்பு நீங்கும்.

3) முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிட உடல்வலி, அசதி தீரும்.

4) வேலிப்பருத்தி இலைச்சாறு எடுத்து அதில் கால்படி சுண்ணாம்பு நீற்றினது 12 கிராம் போட்டு நன்றாய் கறைத்து ஒருமணி நேரம் வெயிலில் வைத்துக் குடைசல், வலி உள்ள பாகங்களில் நன்றாய்த் தேய்க்க வேண்டும் ஓருமணி நேரத்தில் வலி, குடைச்சல், மூட்டுகளில் வரும் வீக்கம், வலி நீங்கும்.

5) வேலிப்பருத்தி இலையை அறைத்துச் சிறு அடையாக செய்து நல்லெண்ணெயில் போட்டு அடை பொரிந்து மிதக்கும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு ஆறினதும் தலையில் தேய்த்து விட வேண்டும்.இதனால் மண்டை வலி, கபால குத்தல், மண்டை இடி இவைகள் ஒருமணி நேரத்தில் குணமாகும்.  

 6)துளசி இலை, மிளகுப் பொடி, சுக்குப் பொடி-இவைகளைத் தண்ணிரில் போட்டு காஷயமாக்கி பாலும் சர்க்கரையும் சேர்த்து பருக உடல் வலி உடனே நீங்கும்.