ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

குறி சொல்லும் கர்ண எட்சிணி

யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போம்.

கர்ண எட்சிணி மந்திரம்

'ஓம் ஹ்ரிம் ஸ்ரீம் க்லிம் நமோ பகவதே அரவிந்தே மமவசம் குருகுரு சுவாஹா"

- இம்மந்திரத்தை தினம் 1008-உருவீதம் 10 நாட்கள் செபிக்க கர்ண எட்சிணி பிரசன்னமாகும். இந்த தேவதை மூன்றுகால நடப்பையும் சொல்லும்.
பூஜை முறை:

நிவேதனம், அதிரசம், சுண்டல், அப்பம்,தேன், வாசனை திரவியம் - முதலியன வைத்து வணங்கி தூபதீபம் காட்டி செபம் செய்ய வேண்டும்.இதை சித்திசெய்தால் தினம் பத்துபேர் நம்மை சூழ்ந்து கொண்டு இருப்பார்கள்.சர்வ சௌக்கியமுண்டாகும் என்கிறது மலையாள மாந்திரீகம்.

விந்திறங்கா வசியம்-கோரக்கர்மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
                                              

                                                                     -சந்திர ரேகை                       

பொருள்:
                    பெண்களை சேரும் முன் உம்-யம் என்று 108 முறை
எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது.இதனால் ஆனந்தம் அடைந்த
பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள்.

மாரண சூட்சமம்- கோரக்கர்

சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம் தன்னைச்
சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி
நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி
நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்
தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க மாட்டார்
துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்
                                                         

                                                                              -சந்திரரேகை(117)
பொருள்:
                
முச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு  மனதினில் செபித்து
நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது
பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில்
ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க
சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும்

இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளவார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விலங்காமல்
போய்விடும்.  இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில்
நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.