திங்கள், 25 பிப்ரவரி, 2013

சந்தான வித்தை - அகத்தியர்

குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி
எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாராக இச்சமுகத்தாரால்
பேசப்பட்டு அத்தகையோரின் உள்ளத்தை வாடச்செய்கின்றனர்,
குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொரு
திருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள்
குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமுகத்தின்
அவல நிலையைக்காட்டுகின்றது.
பல சகோதரிகள் குழந்தையின்மையால் மனம் நொந்து உயிரை
விடவும் துணிகின்றனர் .அத்தகைய நிலைகள் மாறி நல்லமுறையில்
குழந்தை பிறக்க அகத்தியர் தனது பரிபூரணத்தில் சந்தானம்(குழந்தை)
இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான
அரியதொரு மந்திரத்தைஅருளியுள்ளார். அதைப்பற்றி
இன்றைய பதிவில் பார்ப்போம்.                             
சந்தான கரணி

இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.
                           

                                       - அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்தி
பெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும் 
மந்திரத்தை செபிக்கவும்.
                                                                    பூசை முறை

கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,
குங்குமம்,பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியன
வைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை(original) வைத்துக்கொண்டு
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப்
பார்த்தவாரே "ஓம் ரீங் அங்வங்" என்ற மந்திரத்தை 108 உரு
செபித்தால் மந்திரம் சித்தியாகும்.
 இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.
பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும்
மங்கையர்க்கு மாதவிலக்கான சமயத்தில் உண்ணும்படி கொடுத்தால்
அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி
குழந்தை பிறக்கும்.
                

அவள் மலடியாய் இருந்தாலும் இம்மந்திரத்தால் ஒன்பது மாதத்திற்குள்
அவளுக்கு கெற்பம் உண்டாகும். இது குழந்தை செல்வத்தை தரும்
அரிய மந்திரமாகும் என்பதே இதன் இரகசியமான உண்மை,
இதை சித்தர்கள் சந்தான வித்தை,சந்தான கரணி என்பார்கள்
இதை அறிந்தவர்கள் யாருமில்லை,நீ அறிந்து கொண்டாலும்
இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் உன் மனதளவில்
வைத்துக்கொண்டு ஆழ்நிலை தியானதின் மூலம் பிரபஞ்சத்தின்
ஆற்றலை உன்னுள் பெருக்கிக் கொண்டு வாழ்வாயாக என்கிறார்
அகத்தியர்.
                        
                 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

திங்கள், 18 பிப்ரவரி, 2013

குட்டி சாத்தான் வசிய மந்திரம்

மலையாள மாந்திரீகத்தில் அதிகமாக கையாளப்படுவதும்,
மிக மிக இரகசியமாக வெளிடாமலும் பாதுகாக்கப்பட்டும் வரும்
அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தை
இன்றைய பதிவில் பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற
நல்லெண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.
வழிமுறைகள்:

வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது
நதியில் ஸ்நானஞ்செய்து அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு
தண்ணீரில் நின்று கொண்டு நாற்பத்தெட்டு நாள் கீழ்சொல்லும்
மந்திரத்தை செபிக்கவும்.

செபிப்பவர் தானே சமையல் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட
வேண்டும். தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து
அதில் படுத்துக்கொள்ள வேண்டும்.
                 
                           குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம்    

'ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா
  '.


என்று நாளென்றுக்கு108 உரு வீதம் நாற்பது நாள் செபிக்க
சித்தியாகும். இப்படி செய்து வர நாற்பதாம் நாள் மேற்படி
தேவதை ஒரு சிறிய மனித ரூபத்துடன் விபூதி பையும்,
பிரம்பும் கொண்டு வரும் வந்து பூசை செய்யும் குளத்தின்
ஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி
ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில்
பயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும், பிரம்பும்
எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று
கொண்டால் இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல்

விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.
அப்போது நீ என்னிடம் நான் நினைக்கும் போதெல்லாம் வந்து

நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன்மீதுஆணையிட்டுக் கொடு என்று சொல்ல வேண்டும்.
அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும்,
பிரம்பையும் கொடுத்து விடவும்.பின்னர் இது நம்முடனே
இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின்
கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது.
 நாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள
சாத்தானுக்கு காட்டி விட்டு சாப்பிடவும்.அப்படி செய்யாதவரை
குட்டி சாத்தான் கெடுதல் செய்யும்.                                                     
                                                             இதன் நன்மை

எந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்
கொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்
நாம் அனுபவிக்ககூடாது.
நாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு
செல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி
செல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

           பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

புதன், 13 பிப்ரவரி, 2013

பயித்தியம் தீர வைத்தியம்-புலிப்பாணி


தானென்ற சிறுகீரை வேரைத் தானுந்
தானரைத்து எலுமிச்சங் காய்தான் வீதம்
வானென்ற மூன்று நாளாறு வேளை
வளமாக வெந்நீரிற் கொடுத்துப் பாரு
கோனென்ற ஆறு நாளுப்பாகாது
கொற்றவனே ஏழா நாளெல்லாமாகும்
ஊனென்ற பயித்தியந்தான் தீர்ந்து போகும்
உத்தமனே போகருட கடாட்ச்ந்தானே.(386)

                                 -புலிப்பாணி வைத்தியம் 500

பொருள்:

சிறுகீரை வேரை நன்றாக அரைத்து எலுமிச்சங்காய் அளவு
காலை-மாலையென இரண்டு வேளையும் மூன்று நாட்கள் வெந்நீரில் கலக்கிக்குடித்தால் பயித்தியம் தீர்ந்து போகும்.

மருந்துண்ணும் மூன்று நாளும் மற்றொரு மூன்று நாளுமாக
ஆறு நாட்கள் வரை உப்பிலாமல் கஞ்சி அருந்தவும்பின்னர்
ஏழாவது நாள் முதல் எல்லா வகை உணவுகளையும்
 சேர்த்துக்கொள்ளலாம் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

                      பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

நாய் வாய்க்கட்டு மந்திரம்


"ஓம் பைரவ ஆகாச பைரவா அண்டாண்ட பைரவா இந்திர
பைரவா அமரரும் தியங்குகின்றார் அடியேன் மனதும்
தியங்குகிறது எதுக்குக்குலைக்குராய் குலைக்காதே குலைத்தால்
அரன்மீது ஆணை ஓம் உம் படு சுவாகா".- என்று 1008 உரு
செபிக்க மந்திரம் சித்தியாகும்.

பின்னர் ஒரு சிட்டிகை மண்ணை எடுத்து மேற்படி மந்திரத்தை
செபித்து கடிக்க வரும் நாய் மீதிற்போட அது கடிக்காது,
குலைக்காது இறை எடுக்காது ஓரு வாரத்திற்குள் நாய்
குன்றிப்போகும்.

வாய் கட்டவிழ்க்கும் மந்திரம்

"நானிட்ட ஆணையும் உன்னைக் கட்டிய கட்டும் வாய்க்கட்டும்
அறுக்க வட்டமிட்ட பகவானே கட்டுபட்ட மிருகமெல்லாம் கட்டி
விட்டேன் ஓம் நமசிவய" - என்று 1008-உரு செபிக்க மந்திரம்
சித்தியாகும்.

பின்னர் நாயின் வாய்க்கட்டை அவிழ்க்க வேண்டுமானால்
மேற்படி மந்திரத்தை செபித்தவாறு மஞ்சள் நீரை அந்நாயின் முகத்தில் தெளித்து கையினால் தடவ குணமாகி விடும் முன்
போலவே குலைக்கும். இறை எடுக்கும்.

                                             பகிர்வில் S.கலைச்செல்வன் M.A