செவ்வாய், 12 மார்ச், 2013

அஷ்டகர்ம சித்தி - தேரையர்


தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக
அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.

தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்
 தானான யவசிமந வசியமாகும்
மின்னின்ற சிவயநம உச்சாடந்தான்
 முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்
ஒன்றான நயவசிம மோகனந்தான்
 உருவுவய நமசியும் வித்துவேடமாமே

வேடமெனும் மநயவசி பேதனந்தான்
 வினையமுடன் மசிவயந மாரணந்தான்
நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு
 நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்
தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்
 திடமாக எட்டெட்டும் சித்தியாகும்
சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்
 தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.
                  

                             தேரையர் சிவபூசாவிதி
பொருள்:
நமசிவய -  தம்பனம்
யவசிமந -  வசியம்
சிவயநம -  உச்சாடணம்
வசியநம -  ஆக்ருஷ்ணம்
நயவசிம -  மோகனம்
வயநமசி -  வித்துவேஷ்ணம்
மநயவசி -  பேதனம்
மசிவயந -  மாரணம்


அஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொரு
கர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் ஐயும் கிலியும் சவ்வும்
என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம்
 உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார்
தேரையர்.
                            பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

3 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. மன்னிக்கவும் ஒரு சாமம் என்ன்பது என்ன?
    செந்தூரம் செய்வது சரியானமுறை என்ன?
    வசிய மருந்து கொடுக்கப்பட்டவரின் வைத்தில் இருக்கும் மருந்தை எவ்வாறு அகற்றுவது?

    தயவு செய்து எனக்கு இறக்கம் காட்டுங்கள் எனது சகோதருக்கு வசிய மருந்து கொடுக்கப்பட்டுள்ளது அய்யா

    பதிலளிநீக்கு
  3. Anna

    Unga kita phone la pesa mudiyuma.

    Enaku naraiya doubts iruku

    பதிலளிநீக்கு