செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் இரண்டாவதாக கூறப்படும் மோகனம்
எட்டு உட்பிரிவுகளைகொண்டது, அது
மோகனத்தின் அதிதேவதை அக்கினிபகவான்
1)சர்வ மோகனம்
2)இராஜ மோகனம்
3)புருஷ மோகனம்
4)ஸ்திரி மோகனம்
5)மிருக மோகனம்
6)சொர்ண மோகனம்
7)சத்துரு மோகனம்
8)லோக மோகனம்
என்பனவாகும்.
இம்மோகனம் எட்டும் சித்திசெய்யும் முறையை இன்றைய
பதிவில் காண்போம்.

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்

பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன் 
பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு
நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்
 நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு
காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகாவென்று
 கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு
சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து
 தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
 தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா
 புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்
பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்
 பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்
கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி பெற்றால்
 கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.

பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று
 பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்
நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்
 நேர்மையுடனுன் முகங்கண்டபோது
வீரடா தானொடுங்கி மோகமாகும்
 வேதாந்த பூரணமே தான்தானானால்
ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ
 அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.
                -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
வசியம் எட்டும் சொன்னேன், அதுக்கடுத்ததாக மோகனத்தை
சொல்கிறேன் கேள்,
ஒரு திங்கள்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில்
நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் 'றீங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை
சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி
உடல் மனசுத்தியுடன்மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில்

தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர்நிலையுடன்
"ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா" என்ற மந்திரந்தை
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால்
இம்மோகனம் எட்டும் சித்தியாகும்.

மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவஜந்துகளும்,
மிருங்களும், மனிதர்களும் உன்னை கண்டமாத்திரத்தில் தனது
நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.
மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள்
வசமாக்கி விடுவார்கள் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை
எனலாம் என்கிறார் அகத்தியர்.

நன்றி
பகிர்வில் S.கலைசெல்வன் MA

2 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா.
  நான் இதில் பத்து கருத்துக்கள் கூறி இருந்தேன் அந்த கருத்தை யாரோ நீக்கி இருக்குறாங்க.

  01.எல்லாம் யந்திரத்திலும் வட்டம் போடசொல்லி இருக்கீங்க காரணம் என்ன?

  02.யந்திரத்தின் படம் சேர்த்து இணைத்தால் நால்லது
  03.யந்திர , மந்திர சபநிவர்த்தி செய்யவேண்டும் என்கிறார்கள். இதில் கூறவில்லையே?
  04.ஏரண்டைதைலம் இடவேண்டு என்று சொல்லுறாங்க?
  05.முறையான பூஜை எப்படி செய்வது?
  06.இவைகளுக்கு பல விதி முறைகள் உண்டாம்?

  இப்படி பல கேள்விகள் உள்ளன.

  ஏதேனும் பிழை இருந்தால் மன்னியுங்கள் தாங்கள் பதம்பிடித்து மன்னிப்பு கேக்கிறேன்

  பதிலளிநீக்கு