ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விஜய பைரவ மந்திரம்ஓம் நமசிவாய பைரவாய உக்ர உக்ர
ஜெய ஜெய ஸ்தம்பய ஸ்தம்பய
ஜம் ஹ்ரீம் ஸ்ரீம் துஷ்ட சேதனவீரா
மாய மந்திர ஜடதரா ஹராய் ஹீம்பட் ஸ்வாஹா.


இம்மந்திரத்தை அமாவாசை நாளில் பூர நட்சத்திரத்தில் வில்வமரத்தடியில்அமர்ந்து கொண்டு 1008 உரு செபிக்க
சித்தியாகும்.
 

 

பின்னர் விபூதியை கையில் வைத்துக்கொண்டு 108 
உருவேற்றி அவ்விபூதியை காடுகளில் தூவிவிட 
அக்காட்டிலுள்ள மிருகங்கள் ஓடாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.இது மிருக தம்பனமாகும்.

அக்காலத்தில் வேட்டைக்கு செல்லும் மன்னர்களும், காடுகளில் 
வாழும் மலைவாழ் மக்களும் இது போன்ற மந்திரங்களை 
பயன்படுத்தி வேட்டை ஆடுவார்கள்.
 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

குழந்தைகளுக்கு நோய்வராத வித்தை


பிள்ளைபெற்ற தாய்மார்கள் நாய் மண்டையோட்டை 
தண்ணீரிலிழைத்து மார்பில் தடவினபடியே குழந்தைகளுக்கு 
பால் கொடுக்க அக்குழந்தைக்கு எக்காலத்திலும் நோய்வராது. 
அப்படி மீறி வந்தாலும் சீக்கிரத்தில் தீர்ந்துவிடும்.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சித்தர் தரிசன மார்க்கம்


நம்மில் பலரும் சித்தர்களின் மந்திரங்களையும், 
ஜாலவித்தைகளையும், வைத்தியங்களை அவர்களின் 
நூல்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.
அவற்றுள் பலவும் பரிபாசைகளாகவே இருப்பதால் அவற்றை 
பொருள் கொள்ளுதல் இயலாத காரியமாகிறது.
அப்படி சித்தர்களின் வழியை தேடி செல்வோர்க்காக 
சித்தர் தரிசன மார்க்கம் என்ற இவ்விடுக்கையில்
 உங்களுக்கு சித்தர்களின் தரிசனத்தை காட்டும் 
மந்திரத்தை வெளியிடுகின்றோம்.


 சித்தர் தரிசன மந்திரம்


இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க 
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி 
விட்ட இடத்தில் நிப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன் அதிகாலை 
நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர 
சித்தர்கள் உனக்கு காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான 
வழியை காட்டுவார்கள். முழுநம்பிக்கையுடன் 
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பூனையை எலிவெல்லும் ஜாலம்

எருக்கம்செடி
குப்பைமேனி
எருக்கம்பாலும்,குப்பைமேனிச்சாறும் கலந்து 
ஓர் எலிக்கு உடல்முழுவதும் பூசி பூனையின் எதிரில் 
விட்டால் பூனையானது வெறி பிடித்ததைப்போல 
அவ்வெலியை சுற்றி வருமேயன்றி அதை ஒன்றும் செய்யாது.
எலியை எடுத்துப் போட்டுவிட்டால் தான் அவ்விடத்தை விட்டு பூனை விலகும். 

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நவக்கிரக பாராயணம் 
"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹா. -மாணிக்கம் போன்ற இவ்வரிய நவகிரக மகாமந்திரத்தை தினம் 16 முறை செபித்துவர வறுமை,பிணி,பகை நீங்கி வாழ்வில் மேன்மை அடையலாம் என்கிறது சோதிட அரிச்சுவடி. பகிர்வில் S.கலைச்செல்வன் M.A