செவ்வாய், 15 அக்டோபர், 2013

பகவதி மந்திரம்-அகத்தியர்

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்க்கிணிங்கி அறிவு மையத்தால் இத்தகவல் வெளியிடப்படுகிறது.

பகவதியம்மன்

பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும் 
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி 
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும். 
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.
 

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும் 
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.

எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று 

வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.
                                                          -அகத்தியர் வாதசௌமியம்

 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

26 கருத்துகள்:

  1. ஐயா .... தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. please give the cell no or mail address



    murugesan.p
    9840663169
    saimurugeshp@gmail.com

    பதிலளிநீக்கு
  3. ஐயா
    உங்களின் விடயங்கள் மிகவும் அருமையாக உள்ளது .நம் மூன் னோர்கள் மூடி மறைத்ததை வெளிப்படையாக சொல்வதற்கு நல்ல மனம் வேண்டும் உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள் .
    ஜெ .செந்தில்குமார்
    லண்டன்

    பதிலளிநீக்கு
  4. தங்களின் ஆதரவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ள குருவே ,
    நான் இந்த மந்திரத்தை சித்தி செய்து விட்டேன்.ஆனால் இம்மந்திரம் சித்தி அடைந்ததை எவ்வாறு அறிந்து அல்லது உணர்ந்து கொள்வது ?

    தங்கள் பதில்களுக்காக காத்திருக்கும் சீடன் ,
    அர்ஜுனன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மந்திரத்தை சித்திசெய்ததாக சொல்கிறீகள் சரி
      எந்த திசை நோக்கி செய்தீர்கள்?
      என்ன கிழமையில் செபித்தீகள்?
      அது வளர்பிறையா தேய்பிறையா?
      செபிக்கப்பட்ட நேரம் நல்ல நேரமா அல்லது ராகுகாலம் எமகண்ட வேளையா?
      எந்த விரிப்பில் அமர்ந்து செபித்தீர்கள்?
      செபிக்கும் முன் உடல்கட்டு,திக்குகட்டு மந்திரம் பயன்படுத்தப்பட்டதா?
      செபிக்க ஆரம்பிக்கும் முன் கணபதியை வழிபட்டிர்களா?
      இது எதைப்பற்றியும் தாங்கள் குறிப்பிடவில்லை. என்பதாலும் மந்திரம் சித்தியடைய
      இம்முறைகளை அறிந்து செய்ய வேண்டியது அவசியம் என்பதை
      மனதில் கொண்டு செயல்படவும்.
      தங்களின் முயற்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
      அன்புடன் S.கலைச்செல்வன்

      நீக்கு
  6. எந்த திசை?என்ன கிழமை?வளர்பிறையா தேய்பிறையா?உடல்கட்டு,திக்குகட்டு மந்திரம் ? இது எதைப்பற்றியும் தாங்கள் குறிப்பிடவில்லை. so pls tell us to gain the power of this manta?

    பதிலளிநீக்கு
  7. அய்யா நான் இந்த மந்திரத்தை வளர்பிறை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பித்து முடித்தேன் .மற்றும் மந்திரம் ஜெபிப்பதற்கு முன்னால் விநாயகர்,அகஸ்தியர் மற்றும் உடல் கட்டு மந்திரைத்தை கூறிய பிறகே ஜெபிக்க ஆரம்பித்ததேன்.தவிர கிழக்கு திசை நோக்கி ஒரு மஞ்சள் விரிப்பில் அமர்ந்து ஜெபித்தேன் .இந்த மந்திரம் எனக்கு சித்தி ஆகி இருக்குமா நான் எப்படி தெரிந்து கொள்வது சற்று விளக்கமாக கூறுங்கள் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி ,அப்படியென்றால் தாங்கள் நாடிப்போன காரியமெல்லாம் தாங்கள் விரும்பியபடியே நடக்கும்.
      சகலமும் உங்களுக்கு வசியமாவதை உணர்வீர்கள்.இதுவரை இருந்துவந்த வாழ்விலிருந்து ஒரு புதிய மாற்றத்தை உணரமுடியும்.
      மன ஓர்நிலையோடு செபித்திருந்தால்மட்டுமே இந்த நிலையை உணரமுடியும்,உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்,

      நீக்கு
  8. நல்லதுங்க நல்ல பயனுள்ள தகவல்கள்.
    பூஜா முறைகளை. எப்படி செய்வது. என்பதை தயவுசெய்து கூறுங்கள். நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. பகவதி மந்திரம்- செபிக்க உடல்கட்டு, திக்குகட்டு மற்ற அனைத்து வழிமுறைகளையும் தயவு செய்து எனக்கு கூறவும்

    பதிலளிநீக்கு
  10. பகவதி மந்திரம்- செபிக்க உடல்கட்டு, திக்குகட்டு மற்ற அனைத்து வழிமுறைகளையும் தயவு செய்து எனக்கு கூறவும்

    பதிலளிநீக்கு
  11. பகவதி மந்திரம்- செபிக்க உடல்கட்டு, திக்குகட்டு மற்ற அனைத்து வழிமுறைகளையும் தயவு செய்து எனக்கு கூறவும்

    பதிலளிநீக்கு
  12. i am rushyanthan from srilanka .i want talkmwith u pls give me your phone number my number 0091773160734, numberone21000@gmail.com

    பதிலளிநீக்கு
  13. ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. அய்யா தொடர்ந்து மந்திரம் சொல்லி வந்தால் நல்லதா கெட்டதா தயவு செய்து விளக்கவும்

    பதிலளிநீக்கு
  16. அய்யா தொடர்ந்து மந்திரம் சொல்லி வந்தால் நல்லதா கெட்டதா தயவு செய்து விளக்கவும்

    பதிலளிநீக்கு
  17. Ayya yanaku Udal kattu and thisai kaattu mandhiram kodunga

    பதிலளிநீக்கு