ஞாயிறு, 5 மே, 2013

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்

அஷ்ட கர்மங்களில் நான்காவதாக கூறப்படுவது உச்சாடனம் ஆகும்.
உச்சாடனம் என்பது தீயசக்தி முதல் எந்தவொரு சத்தியின்னையும்
அது இருக்கும் இடத்திலிருந்து விரட்டுவது ஆகும்.
உச்சாடனத்தின் அதிதேவதை நிருதி ஆவார்.
அதைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

உச்சாடனம் எட்டுவகை உட்பிரிவுகளை கொண்டத்தாகும்.
அது யாதெனில்
1)சர்வ உச்சாடனம்
2)மிருக உச்சாடனம்
3)சத்துரு உச்சாடனம்
4)தேவ உச்சாடனம்
5)விஷ உச்சாடனம்
6)ஸ்திரி உச்சாடனம்
7)வியாதி உச்சாடனம் என்பதுவாகும்.

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

காணவே தம்பனத்தைச் சொன்னேன்மைந்தா
கண்காண உச்சாடத்தைக் கருதிக்கேளு
பூணவே உச்சாடனந்தா னெட்டுங்கேளு
பூரணமாய் ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு
தூக்கு தூக்கு டங் டங் சுவாகாவென்று
தோணவே செபிக்கிறதோர் வகையைக்கேளு
துருவமுள்ள அறுகோணம் நடுவேவிந்து
பேணவே விந்தெழுதி விந்துக்குள்ளே
பிலமாக டங்கென்று பிலமாய் நாட்டே.

நாட்டமுடன் சக்கரத்தை முன்னேவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
தேட்டமுள்ள மந்திரத்தைத் தினம்நூறப்பா
சிந்தைமனங் கோணாமலுருவே செய்தால்
வாட்டமென்ன உச்சாடனந்தான் சித்தியாகும்
மகத்தான புருவமதில் மனதைநாட்டி
பூட்டறிந்து வாசியினாற் திறந்துமைந்தா
பொன்னுலகில் நின்று விளையாடுவாயே.
                     -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:

நீ அறிந்து கொள்வதற்காக தம்பனத்தைப்பற்றி சொன்னேன்,
அதற்கு அடுத்ததாக உச்சடனத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்.
இப்போது உச்சாடனம் எட்டுக்குமான மந்திரத்தை
சொல்கிறேன் கேள்,

"ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு தூக்கு தூக்கு டங் டங் சுவாகா"
இம்மந்திரத்தை செபிக்கும் முறையை சொல்கிறேன் கேள்,
உச்சாடன மந்திரத்தை ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்
மனசுத்தியுடன் பச்சைப்பட்டு உடுத்தி நீலக்கம்பளம் விரித்து
அதன்மேல் மேற்கு நோக்கி அமர்ந்து கொண்டுஒரு வெள்ளீயதகட்டில்
அறுகோணம் வரைந்து அதன் நடுவில் ஒரு வட்டம்போட்டு
அவ்வட்டத்தினுள் "டங்" என்று எழுதவும்.


உச்சாடன சக்கரம்
 பின்னர் நீ வரைந்த சக்கரத்தை உனக்கு முன்பாக வைத்து அதனை சுற்றி தும்பை பூவை வைத்து புங்க எண்ணெயால் விளக்கேற்றவும்.
பிறகு தேங்காய்,பழம்,பத்தி,சூடம்,சந்தனம் உள்ளிட்ட பூசை
பொருட்களை வைத்து மன ஓர்நிலையுடன் வேறு சிந்தைகள்
இல்லாமல்மேற்சொல்லிய மந்திரத்தை நாளொன்றுக்கு
100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் உச்சாடனம் சித்தியாகும்.

உச்சாடனம் சித்தியான பின்னர் மனதை புருவ நடுமையத்தில்
நிறுத்தி பேய்,மிருகம்.அகாத மனிதர் முதல் எந்தவொரு தீயசக்தியும்
ஓரிடத்திலிருந்து விலக வேண்டுமென எண்ணினாலே அது
அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிடும். உச்சான சக்கரத்தை
விட்டில் வைத்தால் அங்குள்ள தீய சக்திகள் ஓடி விடும்.
நோய் உள்ளவர்களுக்கு கட்டினால் அந்நோய் நீங்கி விடும்.
இது இருக்கும் இடத்தில் உள்ள சகல தீயசத்திகளும் விலகி விடும்
என்கிறார் அகத்தியர்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A