வியாழன், 13 பிப்ரவரி, 2014

கருஞ்சாத்தான் மந்திரம்-தன்வந்திரி


வளமாக கருஞ்சாத்தான் சித்துகேளு
ஐயடா சாத்தாற்றல் மூலஞ்சொல்வேன்
அப்பனே சிம் மவ் அவ்வென்று
கையடா வாயிரத்தெட்டுருவைசொல்லு
கனமாகச் சாடுமடா சாத்தாந்தானும்.
                  
                                 -தன்வந்திரி கலைஞானம்500
கருத்துரை :

கருஞ்சாத்தான் மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்,
ஓம் சிம் மவ் அவ் என்று 1008 உரு செபிக்க சித்தியாகும்.
இதை செபிக்கும் முறை என்னவென்றால் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் தூய்மையான ஓரு தனியறையில் 

கம்பளி விரித்து அதில் வடக்குநோக்கி அமர்ந்துகொண்டு எதிரில் பச்சரிசிமாவில் ஒரு ஆண்உருவம் செய்து அதற்கு சிவப்புநிற பூக்களை சூட்டி அதற்கு மது,மாமிசம்,வெத்திலைபாக்கு,தேங்காய்,பழம் 
முலிய படைத்து  கற்பூரம்,சாம்பிராணி காட்டி 
ருத்திராச்சமாலையை கையில் ஏந்தி மனஓர்நிலையோடு
1008 உரு செபிக்க கருஞ்சாத்தான் வசியமாகி தனக்கு வேண்டிய ஏவல்பணியை செய்யும்.

  
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A