திங்கள், 16 மார்ச், 2015

இஸ்லாமிய மந்திரம்


ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதி வந்த பூதமுகமது
தன்னருளின் கல்லால் இரும்பால் கனலால் சட்டையிட்டேன்
வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும்
படைக்கப்பெற்ற ஜின் சைத்தான்களும் எங்கள்மேல் வராமல்
காவல் செய்தேன்.அடர்ந்து வராமல் இரவும் பகலும் ஹாதாவில்
பள்ளி அகம் புகுந்து கொண்டேன் மக்காவினை ஈசு நபியாணை
தரைக்குரு நபியாணை சுலேமான் நபியாணை நால்வேதத்தினாணை
நாற்பத்தி யீராயிரம் நஸாபி ஆணை பம்புடு பற்வைகளும் பட்டுவிழ வேண்டும்.
கூடிய பேய்களெல்லாம் உச்சாட வேண்டும் பக்கப் பேய்களெல்லாம் பறந்தோட வேண்டும்
ஆடிய பேய்களெல்லாம் குலைய வேண்டும்.உச்ச பேய்களெல்லாம் நடுங்க வேண்டும் ஓம் மூன்று அல்லாயிடத்தும்
இறல்லாவத்தும் அமன அல்லா எட்டுதிக்கும் பதினாறு கோணமும் டும் டும் ரீம் ரீம் மங் மங் சங் அக்னாலா குலா
இல்லல்லாஹி சுலேய்மான் சொல்.

 

இம்மந்திரத்தை ஒரு சுத்தமான இடத்திலிருந்து கை,கால்,
முகம் சுத்தி செய்து வெற்றிலைபாக்கு,தேய்காய்,பழம் சந்தனம் குங்குமம் பூ சூடம் சாம்பிராணி முதலியன வைத்து தீபம் காட்டி 
மேற் சொல்லிய மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 108 உரு வீதம் 
மூன்று நாள் செபிக்க சித்தியாகும்.
 

இதனால் பேய் பித்தவர்கள் துஷ்ட தேவதைகளின் இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏவல் பில்லி சூனியதால் பாதிக்க பட்டவர்கள்
முதலானோரை எதிரில் அமரவைத்து அவர் தலை முடியை ஒரு ஆணியில் சுற்ரி சாம்பிராணி காட்டி 9முறை இம்மந்திரத்தை ஓதி மந்திரிக்க சகல பாதிப்பிகளும் நீங்கும்.


குழந்தைகள் மற்றும் பயந்த பிள்ளைகளுக்கு இம்மந்திரத்தை ஓதி கயிறு மந்திரித்து குடுக்கலாம். துண்டை வைத்தும் மந்திரிக்காலாம் இதனால் சகல தீய சத்திகளின் இன்னல்களும் தீர்ந்து நலம் 
உண்டாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 6 மார்ச், 2015

ராஜாஜி செபித்த மந்திரம்

இந்திய அரசில் இவர் வகிக்காத பதவியே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு பல பதவிகளை வகித்தவர்.
இவர் வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
 
இன்றளவும்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது


 தான் வாழ்ந்த காலத்தில் செல்வம்,செல்வாக்கு,பதவி,புகழ் அனைத்தும் இவரை தேடி வந்ததற்க்கு காரணம் இவர் தனது இறுதி காலம் வரையில் இடைவிடாமல் சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரத்தை செபித்து வந்தார்.

அதன் பயனாய் பல பவிகளை பெற்று மக்கள் செல்வாக்கு,
அரசியல் செல்வாக்கு,புகழ்,பாராட்டுக்கள் அனைத்தையும்
பெற்று இன்றுவரை மறையாத தலைவராய் அவர் பெயர் 

நிலைக்கும்படி வாழ்க்கை அமைந்ததற்கு காரண்மாய் 
அமைந்ததே இம்மந்திரமாகும்.
 

இது சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரமாகும் இம்மந்திரத்தை கற்றவர் தனது இறுதி காலத்தில் இதை யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான் 
இறக்க வேண்டுமென்பது வேத கடமையாகும்.

அதனால் ராஜாஜி தனது இறுதி காலத்தில் தன்
மகனிடம் கூறலாமென இருந்தார் ஆனால் அவர் குடிகாரராய் 

இருந்ததால் வேரு யாரிடமும் அதை சொல்ல மனமில்லாமல்
தன் விட்டில் வள்ந்து வந்த கன்றுக்குட்டியின் காதில் அம்மந்திரத்தை செபித்தார்.

  இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
                                                      பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ