புதன், 22 ஏப்ரல், 2015

சகல மந்திரங்களுக்கும் சாப நிவர்த்தி


சித்தர்கள் மற்றும் தேவதைகளின் சாபங்களினால் அவர்கள் 
கூறிய மந்திரங்கள் பலிக்காமல் போகலாம். இதனால் மந்திரமே 
பொய் என்றும் சித்தர்கள் வாக்கு பொய் என்றும் பலர் 
எண்ணுகின்றனர் அது தவறாகும்.  பொதுவாக நல்லவர்களுக்கும்,
தான தர்மங்கள் செய்வோர்க்கும்,பிறர் நலன் கருதுவோர்க்கும்
மனதில் தீய எண்ணங்கள் இல்லாதவர்க்கும்,

பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளவர்க்கும்,
எப்போது மன ஓர் நிலையுடன் இருப்பவர்க்கும்.

நல்ல மனம் படைத்தவர்க்கும்தான் மந்திரம் பலிக்கும்.
 

இது அனைத்தும் இருந்தாலும் சித்தர்களின் அனுகிரமும் 
குருவருளும் இருப்பவர்க்கே மந்திரங்கள் சித்தியாகும். 
அந்த வகையில் சித்தர்கள் எழுதி வைத்த மந்திரங்களுக்கு 
சாபமிட்டு வைத்துள்ளார்கள் அச்சாபத்தை நீக்காமல்
செபிப்போர்க்கு அதனால் தீமையும், வறுமையும், இடைவிடாத சிக்கல்களும், தேவையில்லாத பிரச்சனைகளும் உண்டாகும்.
மன நிம்மதி இல்லாமல் தவிக்கும்படியான சூழ்நிலை உருவாகும்.

எனவே மந்திரங்களை செபிக்கும் முன்னர் அதன் சாபத்தை நீக்கி
செபித்தால்தான் சித்தி பெறமுடியும் என்பதை மனதில் கொள்ளவும்.


மந்திரசாப நிவர்த்தி மந்திரம்
"ஓம் அங் உங் சிங் கிரீம் ஸ்ரீம் அவ்வும் சவ்வும் 

சகல மந்திர சாபம் நசி மசி சுவாகா"
இம்மந்திரத்தை அமாவாசை இரவில் சுத்தமான தனி அறையில் 

பசு சாணத்தில் மெழுகி அதனுல் ஒரு குத்து விளக்கை ஏற்றி 
வைத்து குளித்துவிட்டு வெள்ளை துணி அணிந்துகொண்டு அவ்விளக்கின் எதிரில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு 
மன ஓர் நிலையோடு சித்தர்களை நினைத்து "அடியேன் ஓதும் 
மந்திர சாபம் அறவே நீங்க அருள்தர வேண்டும்" என மனதார வணங்கவிட்டு  ருத்திரட்ச்ச மாலையை கையில் ஏந்தியவாறு கண்ணை மூடிக்கொண்டு மந்திரதை 1008உரு செபிக்க 
மந்திரம் சித்தியாகும்.
 

1008 உரு செபிக்கும்வரை கண்ணை திறக்கக்கூடாது.
செபிக்கும் சமயத்தில் யாரோ அழைப்பது போலவும்,
உங்களை தொடுவது போலவும், பூச்சிகள் உடலில் ஊறுவது 
போலவும், பின்பக்கமாக உங்களை தள்ளுவது போலவும் 
தோன்றலாம் சிலருக்கு மயக்கம்கூட வருவது போல 
இருக்கலாம் ஆனால் எக்காரணத்தைக்கொண்டும் 
மந்திரத்தை 1008உரு செபித்து முடிக்கும் வரை  கண்ணை 
திறக்காமல் செபித்தால்தான் சித்தி உண்டாகும் என்பதை 
மனதில் கொள்ளவும்.
 

மந்திரம் சித்தியான பின்பு எந்த மந்திரத்தை செபிக்கும் 
முன்பும் இம்மந்திரத்தை 9 உரு செபித்து பின்னர் செபிக்க 
அதன் சாபம் நீங்கி அது சித்தியாகும்.
  

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A