வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

கவுனமணி-கருவூரார்



நாட்டுவாய் காக்கையொன்று கொண்டுவந்து
நாற்கழஞ்சி சூதமதன் வாயிலிட்டு
நாட்டுவாய் புதுப்பானைய் குள்ளேமைந்தா
நற்கள்ளுக் குறுணியதில் நன்றாய்வாரே
வார்த்தந்தக் கள்ளுக்குள்ளே காக்கைதன்னை
வைத்தங்கே வாய்மூடி சீலைசெய்து
பாரப்பா ஆறுதிங்கள் ரவியில்வைத்துப்
பார்சூதங் குளிகையாய் வழியுமப்பா
சேரப்பா ஆறுபலம் வங்கந்தன்னை

 செப்பமுடன் உருக்கியதில் குளிகையூட்ட
ஆரப்பா நீர்வாங்கும் பின்னைக்கேளு
அப்பனே கெவுனமா வோடுந்தானே
கெவுனமாம் வாயிலிட்டு ஆகாசத்தோடு.
                                  கருவூரார் பலதிரட்டு

இம்முறையில் மணி செய்து வாயில் அடக்கி கொண்டால் ஆகாத்தில் பரந்து செல்லலாம் என்கிறார் கருவூரார். இங்கு இதை தெளிவாக வெளியிட விரும்பவில்லை அதனால்தான்  ஒரு பகிர்வாக மட்டும் பதிவிடுகிறேன்,


பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A