திங்கள், 27 ஆகஸ்ட், 2012

மூலிகை சாபநிவர்த்தி


மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து பொங்கல் வைத்து அதன் முன் வாழை இலையில் தேங்காய், பழம், வெற்றிலை பக்கு, ஊதுவர்த்தி   இவைகளை வைத்து தூபதீபம் காட்டி வணங்கி கிழக்கு முகமாய் அமர்ந்து சாபநிவர்த்தி மந்திரத்தை 15-உரு செபித்து மஞ்சள் நூலால் காப்பு கட்ட வேண்டும்.காப்பு கட்டினவுடன் ஒரு எலுமிச்சம் பழத்தை அறுத்து அதை முன்று சுற்று சுற்றி வீசி எறிந்துவிட்டு வேர் எடுக்கவேண்டும்.வேர் எடுக்கும் போது ஆணிவேர் அறாமல் எடுக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமைதான் மூலிகை எடுக்க உரிய நாள். இவ்விதம் காப்புகட்டி சாபநிவர்த்தி செய்து எடுத்தால்தான் மூலிகை நூலில் சொல்லிய பலன் தரும் என்பதை உணர வேண்டும்.


மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்-அகத்தியர்

சித்தியாம் மூலிகையைப் பறிக்கும் முன்னே
 சிறப்பாகச் செடிமுன்னே நின்றுகொண்டு
பக்தியுடன் ஓம் மூலி சர்வமூலி உயிர்மூலி
 பரிவாயுன்னுயிர் உடலில் நிற்கச் சுவாகாவென்று
நத்தியே பதினைந்து உருவே போட
 நலமான சாபவிமோட்சனைந்தானாகும்
.
                                                
                                                    - அகத்தியர் பன்னிரு காண்டம்
விளக்கம்:
                           மூலிகையை பறிக்கும் முன்னே செடியின் முன் நின்று கொண்டு "ஓம் மூலி சர்வமூலி உயிர்மூலி பரிவாயுன்னுயிர் உடலில் நிற்கச் சுவாகா- என்று 15-உரு போட நலமாக சாபநிவர்த்தி ஆகும் என்கிறார் அகத்தியர்.

3 கருத்துகள்:

 1. மஞ்சள் நூலால் காப்பு கட்ட வேண்டும்

  மஞ்சள் நூலால் ethai கட்ட வேண்டும் செடிya ellai

  வேர்aa

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மஞ்சள் பூசிய நூலால் செடி அல்லது மரத்தின் எந்தவொரு பகுதியிலும் காப்பு கட்டலாம்.

   நீக்கு