சாயா புருஷ தரிசனம் என்பது தன் நிழல் உருவத்தைத் தானே பார்ப்பதுவாகும்.
அது எப்படி எனறால் பூமியில் மேடு பள்ளம் இல்லாத சமதரையில் காலை-8 மணிமுதல் 9 மணிக்குள்ளாக தனது நிழலைப் பார்த்தவாறு நிற்கவும், தனது கால் அடி 7-8-9 அடி தூரத்துக்கு தனது நிழல் படும்போது அந்நிழலை 1 நிமிடம் அல்லது 2 நிமிடம் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும்.கண் இமைக்காமல் பார்த்து விட்டு அப்படியே தலையை நிமிர்த்தி சுத்தமான நீலவானத்தை பார்த்தால் அங்கே தனது உருவப்பிம்பம் தோன்றும். அது,
*பொன்னிறமாக தெரிந்தால் அதைப்பார்பவர்க்கு செல்வம் உண்டாகும்.
*வெண்மையாக தெரிந்தால் பிராண பயம் இல்லை, அயுள் வளரும்.
*கருமையாகத் தெரிந்தால் வியாதிகள் வரும்.
*அந்த உருவத்தில் கை,கால்கள் தெரியதிருந்தால் 3 மாதத்தில் மரணம் ஏற்படும்.
*தலையே இல்லாமல் தெரிந்தால் 1 மாதத்தில் மரணம் ஏற்படும்.
*மார்பில் துவாரம்(ஓட்டை)தெரிந்தால் 6 மாதத்தில் மரணமாவான்.
*உன் உருவ நிழலில் ஏதேனும் குறையாக தெரிந்தால் உனக்கு மரணம் ஏற்படுவது உறுதி.
மேலும் மனோன்மணியாள் சொரூபம் போல் உன் ரூபத்தை கண்டாயானால் இவ்வுலகில் நீ வெகுகாலம் இருப்பது உறுதி.
இதேபோல் பனிரெண்டு ஆண்டுகள் சாயாபுருஷ தரிசனத்தை கண்டால் உன் நிழல் உருவம் எப்போதும் உன்னை பின்தொடர்ந்து நிற்கும், நீ தூங்கும்போதும் நடக்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும், ஒருவருடன் பேசும்போதும்,
உண்மையாக உங்க்கு வருங்காலத்தை கூறும்.இதேபோல் பனிரெண்டு ஆண்டுகள் சாயாபுருஷ தரிசனத்தை கண்டால் உன் நிழல் உருவம் எப்போதும் உன்னை பின்தொடர்ந்து நிற்கும், நீ தூங்கும்போதும் நடக்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும், ஒருவருடன் பேசும்போதும்,
உனக்கு வரும் நன்மை,தீமைகளை முன்பே சொல்லும்,
உண் உடம்பு கல்தூண் போலாகும். வையகத்தில் கோடிக்காலம் இருப்பது உறுதி.
நாறும் உடல் அழியாது கோடிக்காலம் இவ்வுலகில் சமாதியில் இருக்கலாம்.
சாயா புருஷ தரிசனத்தை கண்டவர்க்கு எல்லாம் சித்தியாகும், அஷ்டமா சித்திகளை அடைவதில் ஐயமில்லை. பனிரெண்டு ஆண்டுகள் இதை கண்டவர்க்கு மட்டுமே இது சித்தியாகும், அப்படி காணாதவர்க்கு விட்டகுறை (பூர்வ ஜென்ம புண்ணியம்)
இருந்தாலும் இது வாய்க்காது.
மேலும் இத்தரிசனத்தை கண்டவர்கள் தானும் ஒரு சித்தனைப்போல் மலைகளில் இருக்கலாம். அங்குள்ள தேவரிஷிககளை காணலாம். இந்த முறையை தென் திசையில் வாழ்ந்த அகத்தியர் தனக்கு சொன்னதாக கூறுகிறார் போகர் தனது போகர்ஏழாயிரம் என்னும் நூலில்.
மேலும் இத்தரிசனத்தை கண்டவர்கள் தானும் ஒரு சித்தனைப்போல் மலைகளில் இருக்கலாம். அங்குள்ள தேவரிஷிககளை காணலாம். இந்த முறையை தென் திசையில் வாழ்ந்த அகத்தியர் தனக்கு சொன்னதாக கூறுகிறார் போகர் தனது போகர்ஏழாயிரம் என்னும் நூலில்.
நன்றி
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A