திங்கள், 10 செப்டம்பர், 2012

முல்லைப் பூவின் மருத்துவ குணம்


*முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

*முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
...

*முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

*ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

*உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

தேள் விஷம் நீங்க


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

கட்டிகள்,சிரங்குக்கு மந்திரம்

கட்டிகள் பழுத்தபின் உடைக்கும் மந்திரம்:
நஞ்சு, பிஞ்சு, நாசமதாகிப் பிஞ்சு நஞ்சு போக ஸ்வாஹா! (108உரு)
 
சிரங்கு கண்டவுடன் செய்கிற மந்திரம்:


மசிமா மசி; நசி மா நசி! (108உரு)

சிரங்கு நைய மந்திரம்

கசி; நசி! (108உரு)

வயிற்று வலி தீர



*பதினைந்து மிளகு எடுத்து நன்றாக அறைத்துப் பசு வெண்ணெய்யுடன் கலந்து காலை வேளையில் 3-நாட்கள் சாப்பிட வயிற்று வலி தீரும்,

*வெங்காயச் சாறு எடுத்து அத்துடன் போதிய உப்பு கலந்து உட்கொண்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.

*பழுத்த பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கிவிடும்.

*கறிவேப்பிலையை அப்படியே பச்சையாகத் துவையல் செய்து சாப்பிட வயிற்றுவலி இருக்காது.

சீனாவில் காளிதாசர் சிலை


சீனாவின் ஷங்காய் நகரில் இந்திய கவிஞர் காளிதாசருக்கு சிலை உள்ளது.