செவ்வாய், 22 ஜனவரி, 2013

ஆசையே துன்பத்திற்கு காரணம்


ஆசையே துன்பத்திற்கு காரணம்

அனைத்து துன்பங்களுக்கும் ஆசையே காரணமாகும். மண், பெண், பொன்
ஆகியவற்றின் மேல் ஆசை வைப்பதினால் பல பாவங்களையும் மனிதன்
செய்து தனது பிறவியையே நாசம் செய்து கொள்கிறான். விட்டில்பூச்சி
எரிகின்ற ஜூவாலையைக் கண்டு அதன் மேல் ஆசை வைத்து அதில்
விழுந்து தீய்ந்துவிடுகிறது. மகுடியின் இசையில் மயங்கிப் பாம்பு அகப்பட்டுக்
கொள்கிறது. தூண்டிலில் உள்ள இறைச்சித் துண்டை விரும்பி மீன் சிக்கி மடிகிறது. சுகங்களில் மனதை வைத்துத் தனது வாழ்நாட்களை வீணாகக் கழிக்கும் மனிதன்
ஆயுட்காலம் முடிந்தபின்பு ஆசையுடன் சேர்த்த அனைத்தையும் தான்
வாழ்ந்த மண்ணில் விட்டுச்செல்கிறான். சிறு துளிகளாக அலைந்து அலைந்து
சேகரித்த தேனை பிறர் கவர்ந்து செல்வது போல மனிதன் ஆசைவைத்து
பாடுபட்டுச் சேர்த்து வைத்தபணம்,பொருள்,வீடு ஆகிய அனைத்தையும்
பிறரிடம் விட்டே சென்று விடுகிறான்.


"காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற பட்டினத்தடிகளின்
கூற்றின்படி வரும்போது கொண்டுவந்ததும் இல்லை, போகும்போது
கொண்டு செல்வதும் இல்லை.

                                                பகிர்வில் S.கலைச்செல்வன் M.A