திங்கள், 18 பிப்ரவரி, 2013

குட்டி சாத்தான் வசிய மந்திரம்

மலையாள மாந்திரீகத்தில் அதிகமாக கையாளப்படுவதும்,
மிக மிக இரகசியமாக வெளிடாமலும் பாதுகாக்கப்பட்டும் வரும்
அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தை
இன்றைய பதிவில் பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற
நல்லெண்ணத்தின் அடிப்படையில் வெளியிடுகின்றேன்.
வழிமுறைகள்:

வெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது
நதியில் ஸ்நானஞ்செய்து அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு
தண்ணீரில் நின்று கொண்டு நாற்பத்தெட்டு நாள் கீழ்சொல்லும்
மந்திரத்தை செபிக்கவும்.

செபிப்பவர் தானே சமையல் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட
வேண்டும். தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து
அதில் படுத்துக்கொள்ள வேண்டும்.
                 
                           குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம்    

'ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி
சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்
என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,
சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா
  '.


என்று நாளென்றுக்கு108 உரு வீதம் நாற்பது நாள் செபிக்க
சித்தியாகும். இப்படி செய்து வர நாற்பதாம் நாள் மேற்படி
தேவதை ஒரு சிறிய மனித ரூபத்துடன் விபூதி பையும்,
பிரம்பும் கொண்டு வரும் வந்து பூசை செய்யும் குளத்தின்
ஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி
ஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில்
பயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும், பிரம்பும்
எடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று
கொண்டால் இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல்

விபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.
அப்போது நீ என்னிடம் நான் நினைக்கும் போதெல்லாம் வந்து

நான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்
சிவன்மீதுஆணையிட்டுக் கொடு என்று சொல்ல வேண்டும்.
அது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும்,
பிரம்பையும் கொடுத்து விடவும்.பின்னர் இது நம்முடனே
இருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின்
கண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது.
 நாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள
சாத்தானுக்கு காட்டி விட்டு சாப்பிடவும்.அப்படி செய்யாதவரை
குட்டி சாத்தான் கெடுதல் செய்யும்.                                                     
                                                             இதன் நன்மை

எந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்
கொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்
நாம் அனுபவிக்ககூடாது.
நாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு
செல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி
செல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே
இருக்க வேண்டும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

           பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

14 கருத்துகள்:

 1. ஜின் வசிய மந்திரம் பற்றி பதிவுகள்
  அறியத் தாருங்கள் நண்பரே

  நன்றி

  பதிலளிநீக்கு
 2. எனக்கு கல்வியில் சிறந்து விளங்கி பரீட்ச்சையில் சித்தியிட்ட எதாவது வழி இருந்தால் தயவு செய்து கூறுங்கள் எனது email:paramananthamkuruparan@gmail.com

  பதிலளிநீக்கு
 3. உங்களது பதிவுகள் அனைத்தும் பாராட்டுக்குரியவை.
  சில கேள்விகள் :
  நமது தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பிறகு இச்சாத்தானை எப்படி திரும்ப அனுப்புவது ?
  ( அல்லது )
  விரட்டுவது ?
  இல்லை , இச்சாத்தான் நம்மை விட்டு பிறகு விலகாதா ?
  தயவுசெய்து பதில் கூறவும்.
  நன்றி . . .

  பதிலளிநீக்கு
 4. நல்ல கேள்வி உங்களுக்கு சாத்தனின் உதவி தேவை படாவிட்டால் அச்சாத்தானுக்கா ஒரு கற்சிலை அமைத்து ஏய் சாத்தானே நான் உன்னை திரும்பிஅழைக்கும் வரை நீ இச்சிலையில் இருந்து உன்னை வணங்குவோருக்கு அருள் புரிய வேண்டும் என சொல்லினால் அதுவும் அப்படியே செய்யும்.
  சாத்தான் உங்கள் கட்டளைக்கு கட்டுபட்டதே நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படும்.இன்றும் கூட கேரளாவில் கானாடு காத்தா என்ற இடத்திலும் மற்றும் சில இடங்களிலும் குட்டிசாத்தானுக்கு ஆலயங்கள் உள்ளன.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. மந்திரங்களை பத்மாசனத்தில் இருந்து கொண்டு ஜெபித்தால் பலன் கிடைக்குமா நீரில் இறங்காமல் ஜெபித்தால் என்ன வாகும் முறைகளை செய்ய தவறினால் என்ன வாகும்

   நீக்கு
 6. Sathan vasiyam seyyum pothu udal kittu manthiram pods vendama
  Appadi pods vendum enral eppadi seyvathu sollungal sir
  Thanks
  Sriram

  பதிலளிநீக்கு
 7. உடல்கட்டு மந்திரம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.http://arivumaiyam.blogspot.in/2013/03/blog-post_362.html

  பதிலளிநீக்கு
 8. Anbulla Guruvae ,

  Pathivin Muthalil 48 Naal Endrum Manthiraththirku Keel 40 Naal Endrum Kurippittulleergal , Irandil Ethu Sari Guruvae . . . ?

  - - - Arjunan

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மந்திரங்களை பொருத்தவரை எவ்வளவு உரு ஏற்றுகிறோமோ அவ்வளவு சிக்கிரத்தில் சித்தியாகும். சித்தியானபின்பு உரு ஏற்றினால் அதன் வலிமை இன்னும் கூடும்.சிலருக்கு சில மந்திரங்கள் 108 உரு செபித்த உடனே சித்தியாகும்.அதுவே சிலருக்கு 1008 உரு செபித்தால்தான் சித்தியாகும்.நமக்கு மந்திரம் சித்தியாவது எண்ணிகையால் மட்டும் இல்லை.நாம் செபிக்கும் முறை மனகட்டுப்பாடும்தான் அதனால் ஒரு மந்திரம் சித்தியாகும் வரை செபிப்பதுதான் சிறந்தது.
   நன்றி

   நீக்கு
 9. எனக்கு புரியவில்லை.கடவுள் இருக்கிறார்

  பதிலளிநீக்கு
 10. S.kalai selvan உங்க நண்பரை பதிவை செய்யவும். mail:mamk1985@ymail.com

  பதிலளிநீக்கு