வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
திங்கள், 24 பிப்ரவரி, 2014
விசிறிகளின் மருத்துவப்பயன்கள்
1)தென்னை,பனை,ஈச்ச மட்டை விசிறிகளினால்:
வாதம்,பித்தம்,கபம் இவைகளினால் ஏற்படும்
பிணிகளும் சுவையின்மையும் நீங்கும்.
2)வெட்டிவேர் விசிறியினால்:
தாகம்,உடல் எரிச்சல்,பைத்தியம் இவை நீங்கும்.மன ஊக்கம் ஏற்படும்.
3)மயில்தோகை விசிறியினால்:
வாத பித்த நோய்கள், சன்னி, பாதம். வயிற்றுவலி இவை தீரும்.
4)வெண்சாமரத்தினால் விசிறியினால்: வெப்பம்,மயக்கம்,மூர்ச்சை,வியர்வை,ஆயாசம் இவை தீரும்.
புணர்ச்சியில் இச்சையும், செல்வமும் பெருகும்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A
வியாழன், 13 பிப்ரவரி, 2014
கருஞ்சாத்தான் மந்திரம்-தன்வந்திரி
வளமாக கருஞ்சாத்தான் சித்துகேளு
ஐயடா சாத்தாற்றல் மூலஞ்சொல்வேன்
அப்பனே சிம் மவ் அவ்வென்று
கையடா வாயிரத்தெட்டுருவைசொல்லு
கனமாகச் சாடுமடா சாத்தாந்தானும்.
-தன்வந்திரி கலைஞானம்500
கருத்துரை :
கருஞ்சாத்தான் மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்,
ஓம் சிம் மவ் அவ் என்று 1008 உரு செபிக்க சித்தியாகும்.
இதை செபிக்கும் முறை என்னவென்றால் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் தூய்மையான ஓரு தனியறையில்
கம்பளி விரித்து அதில் வடக்குநோக்கி அமர்ந்துகொண்டு எதிரில் பச்சரிசிமாவில் ஒரு ஆண்உருவம் செய்து அதற்கு சிவப்புநிற பூக்களை சூட்டி அதற்கு மது,மாமிசம்,வெத்திலைபாக்கு,தேங்காய்,பழம்
முதலியன படைத்து கற்பூரம்,சாம்பிராணி காட்டி
ருத்திராச்சமாலையை கையில் ஏந்தி மனஓர்நிலையோடு
1008 உரு செபிக்க கருஞ்சாத்தான் வசியமாகி தனக்கு வேண்டிய ஏவல்பணியை செய்யும்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)