புதன், 5 செப்டம்பர், 2012

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்



* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.

* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.

* நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினைகளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.


* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.

* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.


* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும்.  உணவு உட்கொள்வதற்கு முன்பாக,  இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.

ஒற்றைத் தலைவலி நீங்க


முருங்கை இலையும், பூண்டும் சமஅளவு எடுத்து சிதைத்து அதிலிருந்து சாறெடுத்து அச்சாற்றை 5-6 துளிகள்வரை வலபக்கதலைவலிக்கு இடது முக்கிலும், இடபக்கதலைவலிக்கு வலது முக்கிலும் விட ஒற்றைத் தலைவலி நீங்கும்.

உடல் இளைத்தவருக்கு


பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

இருமல் தீர



*இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

*கண்டங்கத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை அரைத்து உண்டு வர இருமல் குறையும்.

*திருநீற்றுபச்சிலை சாற்றில் மிளகு சேர்த்து ஊற வைத்து பொடி செய்து மூக்கில் உறிஞ்ச இருமல் குறையும்

*ஆடாதோடை இலை, சித்தரத்தை,காய்ந்த திராட்சை ஆகியவற்றை காய்ச்சி குடிக்க  இறைப்பு இருமல் குறையும்.

* துளசி, திப்பிலி இவற்றை காய்ச்சி குடிக்க இருமல் குறையும்.

* கருந்துளசி, மிளகு, அதிமதுரம், இவற்றை சாப்பிட சளி கட்டு நீங்கும்.

தலைவலி தீர



1) அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்
2) இஞ்சிச்சாறு, நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து காய்ச்சி சீசாவில் பத்திரப்படுத்தவும். இந்த தைலத்தை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பயத்தமாவு, அரப்புத்தேய்த்து வெந்நீரில் குளிக்கவும். இதனால் தலைவலியும்,பிரசவித்த பெண்களின் ஒற்றைத்தலைவலியும் தீரும்.
 3) வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

உடல் வலி தீர

1) வில்வ இலையும், அருகம் புல்லும் இடித்து சாறு எடுத்து காலை-மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்.

2) மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம்,நெய் சேர்த்து லேகியம் போல் கிளறி 5 கிராம் அளவு சாப்பிட்டு வர உடல்வலி, அலுப்பு நீங்கும்.

3) முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிட உடல்வலி, அசதி தீரும்.

4) வேலிப்பருத்தி இலைச்சாறு எடுத்து அதில் கால்படி சுண்ணாம்பு நீற்றினது 12 கிராம் போட்டு நன்றாய் கறைத்து ஒருமணி நேரம் வெயிலில் வைத்துக் குடைசல், வலி உள்ள பாகங்களில் நன்றாய்த் தேய்க்க வேண்டும் ஓருமணி நேரத்தில் வலி, குடைச்சல், மூட்டுகளில் வரும் வீக்கம், வலி நீங்கும்.

5) வேலிப்பருத்தி இலையை அறைத்துச் சிறு அடையாக செய்து நல்லெண்ணெயில் போட்டு அடை பொரிந்து மிதக்கும் வரை காய்ச்ச வேண்டும். பிறகு ஆறினதும் தலையில் தேய்த்து விட வேண்டும்.இதனால் மண்டை வலி, கபால குத்தல், மண்டை இடி இவைகள் ஒருமணி நேரத்தில் குணமாகும்.  

 6)துளசி இலை, மிளகுப் பொடி, சுக்குப் பொடி-இவைகளைத் தண்ணிரில் போட்டு காஷயமாக்கி பாலும் சர்க்கரையும் சேர்த்து பருக உடல் வலி உடனே நீங்கும்.

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நாள் விழிப்பு


1) புதன்-வியாழன்-வெள்ளி = இரு கண்ணுள்ள நாட்கள்

2) ஞாயிறு- திங்கள் = ஒரு கண்ணுள்ள நாட்கள்
...
3) செவ்வாய் - சனி = குருட்டு நாட்கள் 

மேற்குரிய நாட்களில் 

இருகண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் நன்மையாகும்,

ஒரு கண்ணுள்ள நாட்களில் காரியங்கள் செய்யின் மத்திம பலன் உண்டாகும்.

 குருட்டு நாட்களில் காரியங்கள் செய்யின் துன்பம் உண்டகும்,எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.