செவ்வாய், 2 ஏப்ரல், 2013

அஷ்ட கர்மம் - சல்லிய முனிவர்

அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு அங்கங்களை
குறிக்கும். அவை

1) வசியம்
2) மோகனம்
3) தம்பனம்
4) உச்சாடனம்
5) ஆக்ருஷணம்
6) பேதனம்
7) வித்துவேஷணம்
8) மாரணம் என்பனவாகும்.

இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.

அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார். அதைப்பற்றி இன்றைய
பதிவிலும் இனிவரும் பதிவுகளிலும் தெளிவாக பார்ப்போம்.

அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:

ஞாயிறு  -   வசியம்
திங்கள் -    மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன்         - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி      - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது

சித்தியாகும்.

இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.

திசைகள்:

கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.


உடுப்புகள்:

சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.


உலோகங்கள்:

காரீயம்                  - வசியம்
வங்கம்                    - மோகனம்
பொன்                      - ஆக்ருஷணம்
செம்பு                       - தம்பனம்
வெள்ளீயம்          - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு                    -  பேதனம்
வெள்ளி                  - மாரணத்திற்கும் உகந்த உலோகங்களாகும்.


எண்ணைகள்:

பசு நெய்                          -  வசியம்
நல்லெண்ணை            - மோகனம்
வேப்பெண்ணை         - மாரணம்
புங்கெண்ணை              - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் - வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் - சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்
.


அதிதேவதைகள்:

ஈசன்                      -  வசியம்
அக்கினி               - மோகனம்
இந்திரன்             - தம்பனம்
நிருதி                    - உச்சாடனம்
வருணன்            - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன்              - பேதனம்
எமன் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய

திதேவதைகளாகும்.

மலர்கள்:

மல்லிகை   -  வசியம்
முல்லை -    மோகனம்
தாமரை -      தம்பனம்
தும்பை -       உச்சாடனம்
அரளி       -       ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய

மலர்களாகும்.

ஆசனங்கள்:

வில்வப்பலகை               -    வசியம்
மாம்பலகை                        -   மோகனம்
பலாப்பலகை                     -    தம்பனம்
நீலக்கம்பளம்                    -    உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் -   ஆக்ருசணம்
எட்டிப்பலகை                    -  வித்துவேஷனம்
மரத்தோலாடை              -பேதனம்
அத்திப்பலகை - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய

ஆசனங்களாகும்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

சனி, 30 மார்ச், 2013

உடல் கட்டு மந்திரம்

உடல் கட்டு மந்திரம்

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
 இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,

வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்
செய்ய முடியாது.

வியாழன், 28 மார்ச், 2013

பேய் பூத வசிய அஞ்சனம்(மை)


பேய்மிரட்டி வேர்,     பேய்தேத்தான் வேர்
பேயத்தி வேர்,             பேய் தும்பைவேர்
பேய்பீர்க்கு வேர்,       பேய்முருங்கை வேர்
பேய்பீர்க்கு வேர்,       பேய் துமட்டி வேர்

                     பேய்புடலம் வேர்.
 

இவைகளை முறைப்படி காப்புகட்டி சாப நிவர்த்தி
செய்து ஆணிவேர் அறாமல் தோண்டி எடுத்து உலர்த்தி
தீயில் கறுக்கி கல்வத்திலிட்டு ஓரளிஞ்சி தைலம்
விட்டு இரண்டு சாமம்(6- மணி) நேரம் அரைத்து புனுகு,
கோரோசனம், பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, கஸ்தூரி
இவைகளை ஒரு குன்றிமணி எடைவீதம் சேர்த்து ஒரு
சாமம்(3-மணி நேரம்) அரைத்து எடுத்து கொம்பு டப்பியில்
பத்திரம் செய்யவும்.



                   இதற்கு பூசை மந்திரம்


ஓம் மகா மாரி பகவதி உத்தண்ட காளி
ஐம் கிலிம் சவ்வும் ஸ்ரீம் சர்வ சங்கார ரூபி
பூத வேதாள ரூபினி மமவசம் குருகுரு சுவாகா.

இந்த மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் நான்கு
நாட்கள் செபம் செய்ய வேண்டும். நிவேதனம் பால், பழம்,
பாயாசம், அதிரசம், தேங்காய், சூடம், பத்தி இவைகளை
வைத்து தீபதூபம் காட்டி வணங்கி செபம் செய்ய
சித்தியாகும். இதனால் சகல பேய் பூத, வேதாளங்களும்
இவைகள் வசியம் ஆகும்.
நல்ல வேடிக்கை காட்டி விளையாடலாம்.
எல்லா வேலையும் செய்யும்.
              

 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 26 மார்ச், 2013

ஒற்றைத்தலைவலி நீங்க மந்திரம்



இடது கையில் விபூதியை பரப்பி அதில் ஸ்ரீம் என்று எழுதி
அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூடிக்கொண்டு

"ஓம் காளி அம் அம் கிலியும்
கிலியும் பத்திரகாளி சிவ நசி"


என்று 108 உரு செபித்து பின்பு மேற்படி விபூதியும் வெற்றிலையும்
கசக்கி வலிக்கிற இடத்தில் போட வலி உடனே தீரும்.

செவ்வாய், 12 மார்ச், 2013

அஷ்டகர்ம சித்தி - தேரையர்


தேரையர் தனது சிவபூசாவிதியில் அஷ்டகர்மம் சித்தியாக
அதற்குரிய மந்திரங்களை அருளியுள்ளார்.

தன்மையுடன் நமசிவய தம்பனந்தான்
 தானான யவசிமந வசியமாகும்
மின்னின்ற சிவயநம உச்சாடந்தான்
 முயங்கி நீ வசியநம அழைப்பதாகும்
ஒன்றான நயவசிம மோகனந்தான்
 உருவுவய நமசியும் வித்துவேடமாமே

வேடமெனும் மநயவசி பேதனந்தான்
 வினையமுடன் மசிவயந மாரணந்தான்
நாடவே அட்டகர்மம் ஆடுதற்கு
 நலமாக இவ்வெழுத்தைத் தியானஞ்செய்யத்
தேடவே மூன்றெழுத்தைக்கூட்டி ஓதத்
 திடமாக எட்டெட்டும் சித்தியாகும்
சூடவே கருமம் ஓன்றுக் கொருலட்சந்தான்
 தீரமுடன் செய்திடவே சித்தியுண்டே.
                  

                             தேரையர் சிவபூசாவிதி
பொருள்:
நமசிவய -  தம்பனம்
யவசிமந -  வசியம்
சிவயநம -  உச்சாடணம்
வசியநம -  ஆக்ருஷ்ணம்
நயவசிம -  மோகனம்
வயநமசி -  வித்துவேஷ்ணம்
மநயவசி -  பேதனம்
மசிவயந -  மாரணம்


அஷ்ட கர்மங்கள் சித்தியாக வேண்டுமென்றால் ஒவ்வொரு
கர்மத்திற்கும் கூறிய மந்திரத்தையும் ஐயும் கிலியும் சவ்வும்
என்ற மந்திரத்தோடு சேர்த்து ஒரு கர்மத்திற்கு ஒரு லட்சம்
 உரு வீதம் தியானிக்க அக்கர்மங்கள் சித்தியாகும் என்கிறார்
தேரையர்.
                            பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 5 மார்ச், 2013

நீரழிவை போக்கும் புங்கமலர் சூரணம்


புங்கம் மலர்களை சேகரித்து பசு நெய் விட்டு வறுத்து
பொடியாக்கி கொள்ளவும். இதில் அரைக்கரண்டி வீதம்
காலை மாலை பசும்பாலில் சாப்பிடவும்.21-நாட்கள் சாப்பிட கடுமையான நீரழிவு அகலும்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

திங்கள், 25 பிப்ரவரி, 2013

சந்தான வித்தை - அகத்தியர்

குழந்தை இல்லாமல் வாடும் பல பெண்கள் நம் நாட்டில் மலடி
எனவும், பிள்ளை இல்லாதவள் எனவும் பலவாராக இச்சமுகத்தாரால்
பேசப்பட்டு அத்தகையோரின் உள்ளத்தை வாடச்செய்கின்றனர்,
குழந்தையின்மையின் காரணமாய் பல ஆண்கள் இன்னொரு
திருமணம் செய்து கொள்வதும், பல மருத்துவர்கள்
குழந்தையின்மைக்காக பல லட்சங்கள் பறிப்பது நம் சமுகத்தின்
அவல நிலையைக்காட்டுகின்றது.
பல சகோதரிகள் குழந்தையின்மையால் மனம் நொந்து உயிரை
விடவும் துணிகின்றனர் .அத்தகைய நிலைகள் மாறி நல்லமுறையில்
குழந்தை பிறக்க அகத்தியர் தனது பரிபூரணத்தில் சந்தானம்(குழந்தை)
இல்லாத மங்கையர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்படியான
அரியதொரு மந்திரத்தைஅருளியுள்ளார். அதைப்பற்றி
இன்றைய பதிவில் பார்ப்போம்.                             
சந்தான கரணி

இருந்து கொண்டு குருபரனைத் தியானம் பண்ணி
இன்பமுடன் ஓம் ரீங் அங்வங் கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில் மைந்தா
மார்க்கமுடன் நூற்றெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடன் பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பாய் பாரே.

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் வொன்பதுக்குள் கெர்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
ஆரப்பா அறிவார்கள் சந்தான கரணி
அறிந்துமன துருமையானா லடக்கம்பண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்து வாழே.
                           

                                       - அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:

வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு கணபதி எண்ணி மந்திரம் சித்தி
பெற வேண்டுமென தியானம் பண்ணி விட்டுபின்னர் கீழ்க்காணும் 
மந்திரத்தை செபிக்கவும்.
                                                                    பூசை முறை

கணபதியை முன்னால் வைத்து தேங்காய், பத்தி, சூடம், மஞ்சள்,
குங்குமம்,பால், பழம் வெல்லம், சர்க்கரைப்பொங்கல் முதலியன
வைத்து இதன் நடுவில் சுத்தமான தேனை(original) வைத்துக்கொண்டு
அத்தேனுக்கு கற்பூரம்,சாம்பிராணி கட்டி விட்டு அத்தேனைப்
பார்த்தவாரே "ஓம் ரீங் அங்வங்" என்ற மந்திரத்தை 108 உரு
செபித்தால் மந்திரம் சித்தியாகும்.
 இதனால் அத்தேன் மந்திரசத்தி உடையதாகிவிடும்.
பின்னர் இத்தேனை குழந்தை இல்லையென்று மனம் வருந்தும்
மங்கையர்க்கு மாதவிலக்கான சமயத்தில் உண்ணும்படி கொடுத்தால்
அத்தேனை உண்ட மங்கையர்க்கு உறுதியாக கெற்பம் உண்டாகி
குழந்தை பிறக்கும்.
                

அவள் மலடியாய் இருந்தாலும் இம்மந்திரத்தால் ஒன்பது மாதத்திற்குள்
அவளுக்கு கெற்பம் உண்டாகும். இது குழந்தை செல்வத்தை தரும்
அரிய மந்திரமாகும் என்பதே இதன் இரகசியமான உண்மை,
இதை சித்தர்கள் சந்தான வித்தை,சந்தான கரணி என்பார்கள்
இதை அறிந்தவர்கள் யாருமில்லை,நீ அறிந்து கொண்டாலும்
இதைப்பற்றி வெளியில் சொல்லாமல் உன் மனதளவில்
வைத்துக்கொண்டு ஆழ்நிலை தியானதின் மூலம் பிரபஞ்சத்தின்
ஆற்றலை உன்னுள் பெருக்கிக் கொண்டு வாழ்வாயாக என்கிறார்
அகத்தியர்.
                        
                 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A