செவ்வாய், 5 நவம்பர், 2013

பாலை நீராக்கும் ஜாலம்

தாமரைமணியை(விதை) இடித்துப்பொடியாக்கி பாலில்போட 
 நீராகிவிடும். அதிகமாகப்போட்டால் வெருந்தண்ணீராகிவிடும்.

 பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புக்குரிய அனைவருக்கும் அன்பனின் தீபாவளி நல்வாழ்த்துக்களை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
சு.கலைச்செல்வன்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

பகவதி மந்திரம்-அகத்தியர்

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்க்கிணிங்கி அறிவு மையத்தால் இத்தகவல் வெளியிடப்படுகிறது.

பகவதியம்மன்

பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும் 
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி 
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும். 
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.
 

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும் 
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.

எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று 

வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.
                                                          -அகத்தியர் வாதசௌமியம்

 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்


ஓம் அங் நங் கிலிகிலி என்று 1008 உரு செபிக்க மந்திரம் 
சித்தியாகும். பின்னர் வலது கையில் விபூதி பரப்பி

 
அதில் 'ஓம்' என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து 
அந்த விபூதியை  நோய்வாய்ப்பட்டவர்க்கு கொடுத்து 
அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள 
சகல நோய்களும் நீங்கி விடும். மற்றவர்கள் இவ்விபூதியை
பூசி வர சகலதோசங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.
 
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

செவ்வாய், 1 அக்டோபர், 2013

கார்த்தியாயணி எட்சிணி


"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் நமோ பகவதி
கார்த்தியாயணி எட்ச எட்ச மமகார்யம் ஸாதய ஸாதய
சுவாகா."

       இம்மந்திரத்தை நாளொன்றுக்கு1008 உருவீதம் 40 நாட்கள் 

செபித்தால் சித்தியாகும். இதை வனத்தில் தனியாக இருக்கும் அரசமரத்தின் அடியில் அமர்ந்து செபிக்கவேண்டும்
நிவேதனம்:
மல்லிகை பூ,தாமரை பூ, தேன்,பால்,திராட்சை,கற்கண்டு,

பழம்,தேங்காய் முதலியன வைத்து தூபதீபம் காட்டி வணங்கி 
செபிக்க எட்சிணி ஓர் அழகான மின்னல் கொடிபோல் எதிரில் 
வந்து நிற்கும். உடனே தீபதூபம் காட்டி தாயே நான் 
நினைத்தபோது தரிசனம் தந்து என் வேலைகளை முடித்துத்தர
வேண்டும் என்று வேண்டினால் அப்படியே செய்து முடிக்கும்.
ஒரு சீட்டில் நினைத்த பெண்ணின் பெயரை எழுதி 

அதைப்பூசையில் வைத்து மந்திரத்தை 1008உரு செபித்தால் 
அந்த இடத்திற்கு அப்பெண் மறுஇரவில் வந்து சேருவாள்.
ஆனால் கற்பழித்தால் மகா பாதகம் ஏற்படும்.

பேய் பிடித்தவர் நமது பெயரை சொன்ன மாத்திரத்தில் அதன் 

பேர் சொல்லிமுடி எடுத்து கொடுத்து விட்டு சத்தியம் செய்து விலகிவிடும். எல்லாவிதசுரம்,தலைவலி,பல்வலி,கண்டமாலை,காமாலை இவைகளுக்கு தண்ணிர் மந்திரித்துக்கொடுத்தால் குணமாகும். 
வைப்பு, ஏவல், காட்டேரி, சூனியம், பில்லி  இவைகளுக்கு 
விபூதி மந்திரித்து கொடுத்தால் போதும் குணமாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீன்பிடி வித்தை


மீன்பிடி வித்தை
விஷ்ணுகரந்தை,குங்கிலியம்,சாம்பிராணி இம்மூன்றையும் 
பசும்பால் விட்டரைத்து மீனவர் வலையில் தெளித்து அவ்வலையில் 
மீன் பிடிக்கஅதிக மீன்கள் அகப்படும்.


மீன்பிடிபடா வித்தை
அண்டங்காக்கையைக் கொன்று அதை எரித்து எரித்தசாம்பலை 

ஓர் வாழையிலையில் பரப்பி அதில் "நசிநசி" என்று எழுதி அதற்கு
சாம்பிராணிகாட்டி "நசிநசி" என்று 1008 உரு செபிக்க மந்திரம்
சித்தியாகும். 


அண்டங்காக்கை
 பின்னர் அச்சாம்பலை எடுத்து பத்திரப்படுத்தி
வைத்துக்கொண்டு தேவையானபோது அச்சாம்பலில் ஓர் 

சிட்டிகைஎடுத்து மீனவர் வலையில் தூவிவிட 
அவ்வலையில் மீன்கள் அகப்படாது.
அம்மீனவன் என்னபாடுபட்டாலும் மீன் மாட்டாது.

ஆனால் இது பாவமான செயலாகும்.

பகிர்வில்
சு.கலைச்செல்வன்

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விஜய பைரவ மந்திரம்



ஓம் நமசிவாய பைரவாய உக்ர உக்ர
ஜெய ஜெய ஸ்தம்பய ஸ்தம்பய
ஜம் ஹ்ரீம் ஸ்ரீம் துஷ்ட சேதனவீரா
மாய மந்திர ஜடதரா ஹராய் ஹீம்பட் ஸ்வாஹா.


இம்மந்திரத்தை அமாவாசை நாளில் பூர நட்சத்திரத்தில் வில்வமரத்தடியில்அமர்ந்து கொண்டு 1008 உரு செபிக்க
சித்தியாகும்.
 

 

பின்னர் விபூதியை கையில் வைத்துக்கொண்டு 108 
உருவேற்றி அவ்விபூதியை காடுகளில் தூவிவிட 
அக்காட்டிலுள்ள மிருகங்கள் ஓடாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.இது மிருக தம்பனமாகும்.

அக்காலத்தில் வேட்டைக்கு செல்லும் மன்னர்களும், காடுகளில் 
வாழும் மலைவாழ் மக்களும் இது போன்ற மந்திரங்களை 
பயன்படுத்தி வேட்டை ஆடுவார்கள்.
 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A