ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சத்துரு(எதிரி) துன்பமடையும் சித்து


எதிரியின் காலடிமண், நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,

பெருங்காயம்,21 மிளகு இவைகளை ஒரு மண்பாண்டத்தில் போட்டு புளியமரத்துவிறகால் தீயை எரித்துக்கொண்டே 'நசி மசி ' செபிக்
 

எதிரியின் உடம்பில் தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும் அவன் எலும்புகளெல்லாம் காந்தால் எடுக்கும். எரிப்பதை நிறுத்திவிட எரிச்சல் 
நிற்கும். அப்படியும் எரிச்சல் நிற்காமல் அவன் துன்பப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய 
முத்திய புளியம்பட்டையை நீரில் இடித்துப் போட்டு சர்க்கரை சேர்த்து கசாயமாக காய்ச்சி
 3 நாள் காலை-மாலை உட்கொள்ள நிவர்த்தியாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 29 நவம்பர், 2013

பாதரச சிகிச்சை(mercury tharapy)


எந்த மருந்தினாலும் குணமாகாத நோய்களை குணமாக்க ஓரு 
சூட்சம முறை உண்டு.அது என்னவென்றால் சிறிதளவு பாதஇரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டுஅதனுடன் கொஞ்சம் 
பாகை இலைச்சாறும்,முள்ளங்கி இலையின் சாற்றையும் கலந்து
வைத்தியர் தனது வலது கையின் பெருவிரலால் தேய்க்க அந்த இரசம் நோயாளியின் உள்ளங்கையில் இறங்கிவிடும். கொஞ்சம்கூட வெளியில் தங்காது, அப்பாதரசம் உள்ளுக்கிறங்கியதும் சரீரத்திலிருக்கும் நோய் 
உடனே நீங்கும்.மேலும் அந்த இரசம் சரீரத்தினுள்ளிருக்காது,
 
அதை உடனே வெளியிலகற்றி விடவேண்டும்.அதற்கு இரத்தை
உள்ளே இரக்கிய நோயாளியின் இரண்டு கால்களின் பெருவிரல்களில் எருமைச்சாணியை அப்பிவைத்து காலைத்தொங்க செய்து உயரத்தில் உட்காரவைக்க தேகத்திலோடிய இரசமெல்லாம் அந்த சாணியில்
 வந்து இறங்கிவிடும். அன்றுமுதல் நோயும் நீங்கிவிடும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சாராயபாட்டில் வெடிக்கும் ஜாலம்


 

சாராயம் உள்ள ஒரு பாட்டிலில் கொஞ்சம் கடுகை 
அச்சாரயத்தில்போட்டு மூடிவைக்கசற்று நேரத்தில் 
அப்பாட்டில் சுக்கல் சுக்கலாய் வெடித்துவிடும்.
 

 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சகல விஷகடிகளுக்கு மந்திரம்


ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு 

மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.




சித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்
சகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்
பூச்சிகடி,வண்டுகடி,பூராங்கடி,பாம்புகடி,நாய்கடி,பூனைகடி,எலிகடி
முதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்
மந்திரித்து கொடுக்கவும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 5 நவம்பர், 2013

பாலை நீராக்கும் ஜாலம்

தாமரைமணியை(விதை) இடித்துப்பொடியாக்கி பாலில்போட 
 நீராகிவிடும். அதிகமாகப்போட்டால் வெருந்தண்ணீராகிவிடும்.

 பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 1 நவம்பர், 2013

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்புக்குரிய அனைவருக்கும் அன்பனின் தீபாவளி நல்வாழ்த்துக்களை
மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
சு.கலைச்செல்வன்

செவ்வாய், 15 அக்டோபர், 2013

பகவதி மந்திரம்-அகத்தியர்

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ளது உலகப்புகழ் பெற்ற
பகவதியம்மன் கோவில். இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள்
 பழைமை வாய்ந்தது. பரசுராமர் இக்கோவிலை நிர்மாணித்ததாக
 வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இங்கு நாள்தோறும் நாட்டின்
பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இச்சிறப்பு மிக்க கோயிலில் உறைந்துள்ள பகவதியம்மன் மந்திரத்தை இன்றைய பதிவில் காண்போம்.பல அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்க்கிணிங்கி அறிவு மையத்தால் இத்தகவல் வெளியிடப்படுகிறது.

பகவதியம்மன்

பகவதி மந்திரம்
பாரப்பா இன்னமொரு தீச்சைமார்க்கம்
பத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
நேரப்பா பகவதியாள் தியானந்தன்னை
நேர்மையுடன் சொல்லுகிறே நிசமதாக
சாரப்பா தன்சார்பு நிலையில்நின்று
சங்கையுடன் ஓம் றீங் அங்கென்றேதான்
காரப்பா புருவ நடுக்கமலத்தேகி
கருணையுடணாயிரத்தெட்டுருவே செய்யே.

செய்யடா மானதமாயுருவே செய்யத்
திருயுருவாய் நின்றபகவதியாள்தானும்
மெய்யடா உனதிடமாய் நிருத்தஞ்செய்வாள்
பண்ணப்பா இதுசமயமென்று நீயும்
பகவதியாள் விபூதியை நீதரித்துக்கொள்ளே.

கொள்ளடா விபூதியை நீதரித்துக்கொண்டு
குணமாகப் பகவதியைத்தியானம் பண்ணி
நில்லடா உன்முகங்கண்டோருக்கெல்லாம்
நீங்காத பாவமெல்லாம் நீங்கிப்போகும்
சொல்லடா உன்வசனம் நன்மையாகும்
சோதிதிருப்பகவதியாள் சுருக்கினாலே
அல்லடா உன்மனதை நோகப்பண்ணும்
அவர்கள்குடி செந்தீயிலழுந்துப்பாரே.
                           -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:
பகவதியின் தியானத்தை சொல்கிறேன் கேள்,
மனஓர்நிலையோடு புருவமையத்தில் மனதை குவித்து'ஓம் ரீங் அங்" என்று
1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.இம்மந்திரதை சித்தி செய்தவரின் உள்ளத்தில் பகவதி இருந்து இவர்கள் செய்யும் 
சகல காரியங்களும் இவர்களுக்கு சித்தியாகும்படிசெய்வாள். விபூதியை பூசிகொண்டு இம்மந்திரத்தை தியானம் பண்ணி 
 செல்ல உன் முகம் பார்க்கும் யாவரின் பாவங்களும் விலகிவிடும்.  நீ சொல்வதெல்லாம் பலிக்கும். உனது சகலபாவங்களும் விலகிவிடும். 
உன் மனதை எவனாவது நோகடித்தால் அவன் குடும்பம் அழிந்துபோய்விடும் என்கிறார் அகத்தியர்.
 

மேலும் அகத்தியர் தனது வாதசௌமியம் என்னும் நூலிலும் 
இம்மந்திரத்தை பற்றி சொல்லிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இம்மந்திரத்தினால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை.
சகலமும் சித்தியாகும்.செல்வம் பொழியும்.

எடுத்த காரியமெல்லாம் ஜெயமாகும். நினைத்தபடி முடியும்.
ஆபத்து வராது, வல்வினைகள் அகன்றுவிடும். இம்மந்திரம்
கோடானகோடி பூசைசெய்ததற்கு ஒப்பாகும் என்று 

வாதசௌமியத்தில் கூறியுள்ளார் அகத்தியர்.
                                                          -அகத்தியர் வாதசௌமியம்

 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A