1)தென்னை,பனை,ஈச்ச மட்டை விசிறிகளினால்:
வாதம்,பித்தம்,கபம் இவைகளினால் ஏற்படும்
பிணிகளும் சுவையின்மையும் நீங்கும்.
2)வெட்டிவேர் விசிறியினால்:
தாகம்,உடல் எரிச்சல்,பைத்தியம் இவை நீங்கும்.மன ஊக்கம் ஏற்படும்.
3)மயில்தோகை விசிறியினால்:
வாத பித்த நோய்கள், சன்னி, பாதம். வயிற்றுவலி இவை தீரும்.
4)வெண்சாமரத்தினால் விசிறியினால்: வெப்பம்,மயக்கம்,மூர்ச்சை,வியர்வை,ஆயாசம் இவை தீரும்.
புணர்ச்சியில் இச்சையும், செல்வமும் பெருகும்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A
வளமாக கருஞ்சாத்தான் சித்துகேளு
ஐயடா சாத்தாற்றல் மூலஞ்சொல்வேன்
அப்பனே சிம் மவ் அவ்வென்று
கையடா வாயிரத்தெட்டுருவைசொல்லு
கனமாகச் சாடுமடா சாத்தாந்தானும்.
-தன்வந்திரி கலைஞானம்500
கருத்துரை :
கருஞ்சாத்தான் மூலமந்திரத்தை சொல்கிறேன்கேள்,
ஓம் சிம் மவ் அவ் என்று 1008 உரு செபிக்க சித்தியாகும்.
இதை செபிக்கும் முறை என்னவென்றால் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் தூய்மையான ஓரு தனியறையில்
கம்பளி விரித்து அதில் வடக்குநோக்கி அமர்ந்துகொண்டு எதிரில் பச்சரிசிமாவில் ஒரு ஆண்உருவம் செய்து அதற்கு சிவப்புநிற பூக்களை சூட்டி அதற்கு மது,மாமிசம்,வெத்திலைபாக்கு,தேங்காய்,பழம்
முதலியன படைத்து கற்பூரம்,சாம்பிராணி காட்டி
ருத்திராச்சமாலையை கையில் ஏந்தி மனஓர்நிலையோடு
1008 உரு செபிக்க கருஞ்சாத்தான் வசியமாகி தனக்கு வேண்டிய ஏவல்பணியை செய்யும்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A
சந்தனமரத்தில் உள்ள புல்லுருவிக்கு பூராட நட்சத்திரத்தில்
எலுமிச்சம்பழம் பலி கொடுத்து அப்புல்லுருயை எடுத்து வந்து
அதனுடன் புனுகு,ஜவ்வாது,பச்சைகற்பூரம் இவைகளை சேர்த்து
பாலிரைத்து உருட்டி குளிகை(மாத்திரைகளாக) செய்து வைத்துக்கொண்டு இக்குளிகையை வாயில் ஒதுக்கிவைத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
இதனால் மேலோகம், பூலோகம், பாதாளலோகம் என்ற மூன்று
லோகத்தில் உள்ளவர்களும் நம் கண்ணிற்க்குதோன்றி நமக்கு வசியமாவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
 |
| அரிசி வேகாத ஜாலம் |
நிலவேம்பு வேரை சிறிய துண்டுகளாய் நறுக்கி அரிசி
அறிக்கும்போதோ, உலைப்பானையிலாவது போட்டுவிட்டால்
அவ்வரிசி மூன்று நாளானாலும் வேகாது. அவ்வேரை எடுத்துவிட்டு
வேறு உலைவார்த்து வைத்தால்தான் அரிசி வேகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
வாழைப்பட்டையை இடித்து அதன்சாற்றை கொஞ்சம்
குடித்துவிட்டு
பிராந்தி,விஸ்கி,ரம்,கள் என எந்த மதுவகைகளை எவ்வளவு
அருந்தினாலும் போதை ஏறாது.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
நல்லபாம்பின் கொழுப்பை ஒரு வெள்ளைதுணியில் தடவி
நிழலில்
உலர்த்தி அதை திரித்து திரியாக்கி அத்திரியை
விளக்கில் போட்டு அதில்
ஆமணக்கெண்ணையை ஊற்றி
தீபமேற்ற அவ்வெளிச்சம் பட்ட இடமெல்லாம் நல்ல பாம்புகள்
ஊர்வதைப்போல் இருக்கும்.
பார்ப்பவர்கள் பயந்து ஆச்சரியப்படுவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
எதிரியின் காலடிமண், நண்டுகுழி
மண்,சுடுகாட்டு மண்,
பெருங்காயம்,21 மிளகு இவைகளை ஒரு மண்பாண்டத்தில் போட்டு
புளியமரத்துவிறகால் தீயை எரித்துக்கொண்டே 'நசி மசி ' செபிக்க
எதிரியின் உடம்பில்
தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும் அவன் எலும்புகளெல்லாம் காந்தால்
எடுக்கும். எரிப்பதை நிறுத்திவிட எரிச்சல்
நிற்கும். அப்படியும் எரிச்சல்
நிற்காமல் அவன் துன்பப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய
முத்திய புளியம்பட்டையை நீரில் இடித்துப் போட்டு சர்க்கரை சேர்த்து கசாயமாக காய்ச்சி
3 நாள் காலை-மாலை
உட்கொள்ள நிவர்த்தியாகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A