ஞாயிறு, 4 மே, 2014

பத்மாவதி எட்சணி மந்திரம்

"ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் பத்மாவதி 
சகலலோக திரிகால வர்த்தமானம் ஸதய ஸதய சுவாகா".
இம்மந்திரத்தை நாளொன்றுக்கு 1008 உரு வீதம் 22 நாட்கள் செபிக்க சித்தியாகும்.


பூஜை முறை
பால்,பழ்ம்,தேங்காய்,சுண்டல்,வடை,செவ்வலரி புஷ்பம் 
இவைகளை வைத்து தீபதூபம் காட்டி செபம் 
செய்ய 22வது நாள் பத்மாவதி எட்சணி பிரசன்னமாகும்.
இது குறி சொல்லும் முக்கால நடப்பையும் இதன்மூலம் 
தெரிந்து கொள்ளலாம். மேலும் திருட்டு போன பொருள் 
அது இருக்குமிடம் அதை எடுத்தவன் யார் என்பதையும்
அறியலாம்.மூலிகை, ரசாயனம் இவற்றை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.


                                                               -இந்திர ஜாலம்
பகிர்வில்
சு.கலைச்செல்வன் M.A

சனி, 19 ஏப்ரல், 2014

உடும்பு இறைச்சியின் மருத்துவப்பயன்கள்


உடும்பு இறைச்சியினால் 

மூலம், காது நோய், தலைநோய்.வெள்ளை,வெட்டை,
வீக்கம், மேகம், வாத பித்தம்,தோல் வறட்சி, கிராணி, மூலவாயு,சூதகவாயு,பலவீனம்,குருதி பெருக்கு ஆகியன நீங்கும்.
இதனை உடல் வலுவிற்காக சமைத்துண்பதுண்டு.
பகிர்வில்
சு.கலைச்செல்வன்

வியாழன், 20 மார்ச், 2014

நெருப்பை கையில் அள்ளும் வித்தை

 

வசம்பை கற்றாழைச்சார் விட்டு நன்றாக அரைத்து அதை 
தனது இரு கைகளிலும் பூசிக்கொண்டு நெருப்பை வாரீனால் சுடாது.
இதை பார்ப்பவர்கள் உனக்கு அக்கினி தம்பனமாகி விட்டதாக எண்ணுவார்கள்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

ஞாயிறு, 16 மார்ச், 2014

பச்சை தவளை ஜாலம்



பச்சை தவளையின் கொழுப்பைக் கொண்டுவந்து அதில் ஒரு வெள்ளைத்துணியை போட்டு பிரட்டி
அதை நிழலிலுலர்த்தி திரியாக திரித்து அத்திரியை விளக்கில் போட்டு விளக்கெண்ணை ஊற்றி விளக்கேற்ற அவ்வொளி பட்ட இடமெல்லாம் தவளைகளாகவே தெரியும் விளக்கை அணைத்து விட்டால் ஒன்றுமிராது.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வியாழன், 6 மார்ச், 2014

ஆடுகள் எழுந்திராத ஜாலம்

தேவாங்கு












 ஒரு தேவாங்கைக்கொன்று அதன் தோலை ஆட்டுமந்தையில்
(ஆடுகள் படுத்திருக்கும் இடத்தில்)புதைத்துவிட்டால் 
அவ்வாடுகளில் ஒன்றுகூட எழுந்து இரைமேயப்போகாது.
ஆட்டுமந்தை
 புதைத்திருப்பதை எடுத்துவிட்டால் தான் அவ்வாடுகள் எழுந்து இரைதேடபோகும்.
 

பகிர்வில்
S.கலைசெல்வன் M.A

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நீர் அஞ்சனம்


கரிசாலாங்கண்ணி, கீழாநெல்லி,சாதிக்காய்,

நரிமிரட்டி, பச்சை ஓணான் பிச்சு மற்றும் கண் இவைகளை 
தேன்விட்டு அரைத்து இம்மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் நீரின் அடியில் புதைந்துள்ள பொருட்கள் அனைத்தும் தெரியும்.
 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

திங்கள், 24 பிப்ரவரி, 2014

விசிறிகளின் மருத்துவப்பயன்கள்


1)தென்னை,பனை,ஈச்ச மட்டை விசிறிகளினால்: 
வாதம்,பித்தம்,கபம் இவைகளினால் ஏற்படும்
பிணிகளும் சுவையின்மையும் நீங்கும்.


2)வெட்டிவேர் விசிறியினால்:


தாகம்,உடல் எரிச்சல்,பைத்தியம் இவை நீங்கும்.மன ஊக்கம் ஏற்படும்.
 

3)மயில்தோகை விசிறியினால்: 


வாத பித்த நோய்கள், சன்னி, பாதம். வயிற்றுவலி இவை தீரும். 

4)வெண்சாமரத்தினால் விசிறியினால்: வெப்பம்,மயக்கம்,மூர்ச்சை,வியர்வை,ஆயாசம் இவை தீரும்.
புணர்ச்சியில் இச்சையும், செல்வமும் பெருகும்.

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A