அஷ்ட கர்மங்களில் மூன்றாவதாக சொல்லப்படுவது தம்பனமாகும்,
தம்பனம் என்பது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே
தம்பிக்கச்செய்வதாகும், இது எட்டு உட்பிரிவுகளை கொண்டது.
அவை
1)சர்வ தம்பனம்
2)சுக்கில தம்பனம்
3)ஆயுத தம்பனம்
4)மிருக தம்பனம்
5)ஜல தம்பனம்
6)அக்கினி தம்பனம்
7)தேவ தம்பனம்
8)சர்ப்ப தம்பனம் என்பவாகும்.
தம்பனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்
அறிந்துகொண்டு மோகனத்தை நன்றாய்ப் பார்த்து
அதன்பிறகு தம்பனத்தையருளக்கேளு
வருந்திமன துரிமையினால் வாசிகொண்டு
மகத்தான கேசரியில் மனக்கண்சாத்தி
தெரிந்துஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும்சுகசுகசுவாகாவென்று
திறமாக உருசெபிக்க செயலைக்கேளு
விரிந்துபஞ்ச கோணமதில் நடுவேவிந்து
விந்துநடு ஸ்ரீயும் நன்றாய்ச்சாத்தே.
நன்றாக கேசரியில் மனதைவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
குன்றாமல் மந்திரத்தைத் தினம் நூறப்பா
குறையாமல் உருவேற்ற குணத்தைக்கேளு
விண்டதொரு எட்டுவகைத் தம்பனந்தான்
விபரமுடனின்று விளையாடும்பாரு
மண்டலத்திற் சென்றுவிளையாடுதற்கு
மகத்தான வித்தையடா மகிழ்ந்துபாரே.
பாரப்பா மனங்குவிந்து பதியில்நின்றால்
பத்தியுடன் சகலசித்து மாடலாகும்.
-அகத்தியர் பரிபூரணம்1200
விளக்கம்:
கேள், ஒரு புதன் கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் பச்சை
நிற வஸ்திரம் அணிந்து தென்கிழக்கு திசை நோக்கி பலாபலகையில்
அமர்ந்து கொண்டு ஒரு செம்பு தகட்டில் ஐங்கோணம் (5 ஸ்டார்)
போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் ஸ்ரீயும் என்று எழுதவும்,
![]() |
தம்பனச்சக்கரம் |
வைத்து முறையான பூசை பொருட்களை வைத்துக்கொண்டு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவநடு மையத்தில் குவித்து
"ஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும் சுகசுக சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 108-உரு வீதம் 48-நாட்கள்
செபித்தால் மந்திரம் சித்தியாகும். மந்திரத்தை எண்ணிகை
குறையாமல் 48 நாட்கள் செபித்தால் எட்டுவகை தம்பனமும்
சித்தியாகும். தம்பனம் ஒரு மகத்தான வித்தையாகும்.
தம்பனத்தின் அதிதேவதை இந்திரன் தம்பன சித்தியினால்
சகலசித்தும் ஆடலாம் என்கிறார் அகத்தியர்.
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A
அருமையாக உள்ளது. என்னிடம் உள்ளபடலின் பொருள் தரவேண்டு
பதிலளிநீக்குதங்களின் இணையதள முகவரி வேண்டு தாருங்கள்
என்னுடைய முகவரி kcmohan1987@gmail.com.
வணக்கம் நான் மோகன். என்னிடம் சில பாடல்கள் உள்ளன அதை விளக்கி பொருள் தரவேண்டு ஐயா
பதிலளிநீக்குதங்களின் இணையதள முகவரி வேண்டும்
Nantry ayya melum thagavalkalai ethirparkintren ayya
பதிலளிநீக்குஐயா
பதிலளிநீக்குஅந்த ஈசனின் அருளால் இந்த தகவல் இன்று கண்ணில் பட்டது. நன்றி
பதிலளிநீக்குPoojai padaiyal enna solungal iyya
பதிலளிநீக்குNanri
Thuvakum neram therivikkavum
பதிலளிநீக்குஎனக்கு கை பழக்கம் உள்ளது
பதிலளிநீக்குஇதை சரிசெய்வதற்கு எனக்கு தம்பனம் மந்திரம் தேவை
9543531141