ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மருத்துவரை அழைக்கும் திசைகளின் குணம் - யூகிமுனிவர்

மருத்துவரை ஒருவன் அழைக்கும்போது

கிழக்கில் இருந்து அழைத்தால்                                         - நன்று
தென் கிழக்கு, தென் மேற்க்கு ஆகிய
திசைகளில் நின்று அழைத்தால்                                     - நோயாளி இறக்கும் குறிப்பை உணர்த்தும்
மேற்க்கு நின்று அழைத்தால்                                            - நன்று
வடமேற்க்கு                                                                                  - மத்திமம்
வடகிழக்கு                                                                                      - நற்குணம் தரும்  என்கிறார் யூகிமுனிவர்

                                                                                                                                                பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                                                       -அறிவுமையம்-

மருத்துவர் அணியவேண்டிய ஆடை- யூகிமுனிவர்


          தூய்மையான வெண்மை நிற ஆடை உடுத்தி வினைதீர வேண்டுமென நினைத்து மருந்து செய்பவரே மேன்மைமிக்க மருத்துவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்,
இவர்கள் பல நூல்களை கற்றுத்தேர்ந்தவர் என்பதை கண்டுகொள்ளலாம் என்கிறார் யூகிமுனிவர்.
                                                                                                                            பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                              -அறிவுமையம்-

சனி, 15 செப்டம்பர், 2012

கல்வத்தின் அளவும் அமைப்பும்-அகத்தியர்


சித்த மருத்துவத்தில் மருந்துகளை அரைக்க பயன்படும் கல்வம் மிக முக்கியமானது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வத்தை எந்த அளவில் அமைக்கவேண்டும் என அகத்தியர் தனது பெருநூல் காவியத்தில் கூறியுள்ளார். அதைப்பற்றி இப்பக்கத்தில் விரிவாகப் பார்ப்போம்.

ஆமேதான் பண்டிதற்குக் கல்வம் சொல்வேன்
அப்பனே புலஸ்தியனே புத்திவானே
தாமேதான் நீளமது சொல்லக்கேளு
சாற்றுகிறேன் அங்குலந்தான் பதினாறாகும்
நாமேதான் அகலமது வாறதாகும்
வலமான குழியாமது வாழஞ்சொல்வேன்
போமேதான் வங்குல மிரண்டதாகும்
பொலிவான நன்னியென்ற கல்லுமாமே


கல்லான கல்லதுதான் சொல்லக்கேளு
கருக்குருந்தை செங்குருந்தை நன்னியாகும்
சொல்லுவேன் சாற்றோரம் வரம்புகம்பி
திரண்ட வங்குலமதுதான் வொன்றேயாகும்
வல்லசித்தர் சொற்படியே புலிமுகமும் வைத்து
வளமையுடன் சித்தரித்து வண்மையாக
புல்லறிவால் கல்லமைத்துச் செய்யும் யோகங்
பூதலத்தில் தேவவயித்தியானான் பாரே.
                          

                                          -அகத்தியர் பெருநூல் காவியம்
பொருள்:
சித்த மருத்துவர்க்கு பயன்படும் கல்வத்தை பற்றி சொல்கிறேன் புலத்தியனே கேளு,
கல்வத்திற்க்கு நீளமானது - 16 அங்குலம்
அகலம்                                              - 6 அங்குலம்
குழி ஆழத்தின் அளவு            - 2 அங்குலம்
விளிம்பின் அளவு                    - 1 அங்குலம்
                    -என்ற அளவில் நல்ல பொலிவான நன்னியென்ற திடமான கல் வகையில் கருங்கல் அல்லது சிவப்பு கல்லை தேர்ந்தெடுத்து கல்வம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் கல்வத்தின் முகப்பில் வல்லமையுடய சித்தர்கள் சொன்னபடி புலிமுகம் சித்தரித்து கல்வத்தை அமைக்கவேண்டும். மேற்சொல்லிய அளவு முறைப்படி நுண்ணிய அறிவோடு கல்வம் அமைத்து வைத்தியம் செய்பவன் உலகத்தில் தேவ வைத்தியனாவான் என்கிறார் அகத்தியர்.
                                                                                                                 பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                        -அறிவு மையம்-

வியாழன், 13 செப்டம்பர், 2012

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற

முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

முல்லைப் பூவின் மருத்துவ குணம்


*முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி முக்கில் விட தலைவலி தீரும்.

*முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.
...

*முல்லைப் பூவை அரைத்து அல்லது அப்படியே வைத்து மார்பில் கட்டி வர தாய்ப்பால் சுரப்பு குறையும்.

*ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

*உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

தேள் விஷம் நீங்க


இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

கட்டிகள்,சிரங்குக்கு மந்திரம்

கட்டிகள் பழுத்தபின் உடைக்கும் மந்திரம்:
நஞ்சு, பிஞ்சு, நாசமதாகிப் பிஞ்சு நஞ்சு போக ஸ்வாஹா! (108உரு)
 
சிரங்கு கண்டவுடன் செய்கிற மந்திரம்:


மசிமா மசி; நசி மா நசி! (108உரு)

சிரங்கு நைய மந்திரம்

கசி; நசி! (108உரு)