செவ்வாய், 14 மே, 2013

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அஷ்டகர்மங்களில் ஐந்தாவதாக சொல்லப்படுவது ஆக்ருஷணமாகும்,
ஆக்ருஷணம் என்றால் தன்னை நோக்கி இழுத்துக்கொள்ளுதல்
என்று பொருள். எந்த ஒரு பொருளையும் சத்தியையும்
ஆகர்க்ஷிக்கலாம்.  அதாவது மிருகம்,மனிதர்,தெய்வம் முதல்
எதையும் நம்மை நோக்கி வரவழைப்பதே ஆக்ருஷணமாகும்.
ஆக்ருஷணம் எட்டு உட்பிரிவுகளைக் கொண்டது. அவை

1)சர்வ ஆக்ருஷணம்
2)பூத ஆக்ருஷணம்
3)இராஜ ஆக்ருஷணம்
4)புருஷ ஆக்ருஷணம்
5)ஸ்திரி ஆக்ருஷணம்
6)மிருக ஆக்ருஷணம்
7)தெய்வ ஆக்ருஷணம்
8)லோக ஆக்ருஷணம் என்பனவாகும்.
ஆக்ருஷணத்தின் தேவதை வருணன் ஆவார்.

ஆக்ருஷணம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

நோக்கமுடன் உச்சாடனத்தைச் சொன்னேன்மைந்தா
நுண்மையுடன் ஆக்ருஷணத்தி னுண்மைகேளு
பார்க்கமனக் கண்ணாலே நோக்கமாகி
பதிவாக ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும்
நமோபகவதிதேவி டங்டங் சுவாகாவென்று
தீர்க்கமுடனுருவேறக் கருவைக்கேளு
சிவசிவா நவகோணநடுவில்விந்து
மகத்தான விந்துநடு ஓமென்றூணே

உண்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
பேணியந்த மந்திரத்தைத் தினம்நூறப்பா
பிரியமுடன் தினம் நூறுருவேசெய்தால்
காணுமந்த ஆக்கிருஷ்ணந்தான் சித்தியாகும்
கருணையுட னினைத்ததெல்லாங் காணுங்காணும்
வேணுமிந்த ஆக்கிருஷ்ணந்தான் உலகத்தோர்க்கு
வேண்டிமிகச் சொன்னதிந்த விவரம்பாரே.
                       -அகத்தியர் பரிபூரணம் 1200


பொருள்:
நீ தெரிந்து கொள்வதற்க்கா உச்சாடத்தை பற்றி சொன்னேன்,
அதற்கடுத்ததாக ஆக்கிருஷ்ணத்தை சொல்கிறேன் கேள்,
ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ஒரு தங்க தகட்டில் நவகோணம்

போட்டு அதன் நடுவில்ஒரு வட்டம் போடவும் பின்னர்
அவ்வட்ட்த்தினுள் ஓம் என்று எழுதவும். எழுதிய அந்த யந்திரத்தை
பூசையில் வைத்து அதை சுற்றி அரளி மலர்களால் அலங்கரிக்கவும்.

பின்னர் உடல்மனசுத்தியுடன் செம்பட்டு ஆடை உடுத்தி வெள்ளாட்டு

தோலை விரித்து அதன்மீது வடமேற்கு திசை நோக்கி அமர்ந்து
கொண்டு மன ஓர்நிலையுடன்
"ஓம்கிலியும் சவ்வும் றீயும் ஐயும் நமோபகவதிதேவி டங்டங் சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள்

செபித்தால் ஆக்ருஷணம் சித்தியாகும்.
ஆக்ருஷணம் சித்தினால் நாம் நினைத்த எதையும் நம்மை
நோக்கி வரவழைக்கலாம். உலக மக்கள் தனக்கு வேண்டியதை
அடைந்து கொள்வதற்க்கா இதைப்பற்றி விவரமாக சொன்னேன்
என்கிறார் அகத்தியர்.
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்,ஏ

ஞாயிறு, 5 மே, 2013

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்

அஷ்ட கர்மங்களில் நான்காவதாக கூறப்படுவது உச்சாடனம் ஆகும்.
உச்சாடனம் என்பது தீயசக்தி முதல் எந்தவொரு சத்தியின்னையும்
அது இருக்கும் இடத்திலிருந்து விரட்டுவது ஆகும்.
உச்சாடனத்தின் அதிதேவதை நிருதி ஆவார்.
அதைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

உச்சாடனம் எட்டுவகை உட்பிரிவுகளை கொண்டத்தாகும்.
அது யாதெனில்
1)சர்வ உச்சாடனம்
2)மிருக உச்சாடனம்
3)சத்துரு உச்சாடனம்
4)தேவ உச்சாடனம்
5)விஷ உச்சாடனம்
6)ஸ்திரி உச்சாடனம்
7)வியாதி உச்சாடனம் என்பதுவாகும்.

உச்சாடனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

காணவே தம்பனத்தைச் சொன்னேன்மைந்தா
கண்காண உச்சாடத்தைக் கருதிக்கேளு
பூணவே உச்சாடனந்தா னெட்டுங்கேளு
பூரணமாய் ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு
தூக்கு தூக்கு டங் டங் சுவாகாவென்று
தோணவே செபிக்கிறதோர் வகையைக்கேளு
துருவமுள்ள அறுகோணம் நடுவேவிந்து
பேணவே விந்தெழுதி விந்துக்குள்ளே
பிலமாக டங்கென்று பிலமாய் நாட்டே.

நாட்டமுடன் சக்கரத்தை முன்னேவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
தேட்டமுள்ள மந்திரத்தைத் தினம்நூறப்பா
சிந்தைமனங் கோணாமலுருவே செய்தால்
வாட்டமென்ன உச்சாடனந்தான் சித்தியாகும்
மகத்தான புருவமதில் மனதைநாட்டி
பூட்டறிந்து வாசியினாற் திறந்துமைந்தா
பொன்னுலகில் நின்று விளையாடுவாயே.
                     -அகத்தியர் பரிபூரணம்1200

பொருள்:

நீ அறிந்து கொள்வதற்காக தம்பனத்தைப்பற்றி சொன்னேன்,
அதற்கு அடுத்ததாக உச்சடனத்தைப் பற்றி சொல்கிறேன் கேள்.
இப்போது உச்சாடனம் எட்டுக்குமான மந்திரத்தை
சொல்கிறேன் கேள்,

"ஓம் சங்வுங்கிலியும் தாக்கு தாக்கு தூக்கு தூக்கு டங் டங் சுவாகா"
இம்மந்திரத்தை செபிக்கும் முறையை சொல்கிறேன் கேள்,
உச்சாடன மந்திரத்தை ஒரு வியாழக்கிழமை நாளில் உடல்
மனசுத்தியுடன் பச்சைப்பட்டு உடுத்தி நீலக்கம்பளம் விரித்து
அதன்மேல் மேற்கு நோக்கி அமர்ந்து கொண்டுஒரு வெள்ளீயதகட்டில்
அறுகோணம் வரைந்து அதன் நடுவில் ஒரு வட்டம்போட்டு
அவ்வட்டத்தினுள் "டங்" என்று எழுதவும்.


உச்சாடன சக்கரம்
 பின்னர் நீ வரைந்த சக்கரத்தை உனக்கு முன்பாக வைத்து அதனை சுற்றி தும்பை பூவை வைத்து புங்க எண்ணெயால் விளக்கேற்றவும்.
பிறகு தேங்காய்,பழம்,பத்தி,சூடம்,சந்தனம் உள்ளிட்ட பூசை
பொருட்களை வைத்து மன ஓர்நிலையுடன் வேறு சிந்தைகள்
இல்லாமல்மேற்சொல்லிய மந்திரத்தை நாளொன்றுக்கு
100 உரு வீதம் 48 நாட்கள் செபித்தால் உச்சாடனம் சித்தியாகும்.

உச்சாடனம் சித்தியான பின்னர் மனதை புருவ நடுமையத்தில்
நிறுத்தி பேய்,மிருகம்.அகாத மனிதர் முதல் எந்தவொரு தீயசக்தியும்
ஓரிடத்திலிருந்து விலக வேண்டுமென எண்ணினாலே அது
அவ்விடத்தை விட்டு விலகி ஓடிவிடும். உச்சான சக்கரத்தை
விட்டில் வைத்தால் அங்குள்ள தீய சக்திகள் ஓடி விடும்.
நோய் உள்ளவர்களுக்கு கட்டினால் அந்நோய் நீங்கி விடும்.
இது இருக்கும் இடத்தில் உள்ள சகல தீயசத்திகளும் விலகி விடும்
என்கிறார் அகத்தியர்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

தம்பனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்



அஷ்ட கர்மங்களில் மூன்றாவதாக சொல்லப்படுவது தம்பனமாகும்,
தம்பனம் என்பது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே
தம்பிக்கச்செய்வதாகும், இது எட்டு உட்பிரிவுகளை கொண்டது.
அவை
1)சர்வ தம்பனம்
2)சுக்கில தம்பனம்
3)ஆயுத தம்பனம்
4)மிருக தம்பனம்
5)ஜல தம்பனம்
6)அக்கினி தம்பனம்
7)தேவ தம்பனம்
8)சர்ப்ப தம்பனம் என்பவாகும்.

தம்பனம் எட்டுக்கும் மந்திரம்-அகத்தியர்

அறிந்துகொண்டு மோகனத்தை நன்றாய்ப் பார்த்து
அதன்பிறகு தம்பனத்தையருளக்கேளு
வருந்திமன துரிமையினால் வாசிகொண்டு
மகத்தான கேசரியில் மனக்கண்சாத்தி
தெரிந்துஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும்சுகசுகசுவாகாவென்று
திறமாக உருசெபிக்க செயலைக்கேளு
விரிந்துபஞ்ச கோணமதில் நடுவேவிந்து
விந்துநடு ஸ்ரீயும் நன்றாய்ச்சாத்தே.

நன்றாக கேசரியில் மனதைவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
குன்றாமல் மந்திரத்தைத் தினம் நூறப்பா
குறையாமல் உருவேற்ற குணத்தைக்கேளு
விண்டதொரு எட்டுவகைத் தம்பனந்தான்
விபரமுடனின்று விளையாடும்பாரு
மண்டலத்திற் சென்றுவிளையாடுதற்கு
மகத்தான வித்தையடா மகிழ்ந்துபாரே.
பாரப்பா மனங்குவிந்து பதியில்நின்றால்
பத்தியுடன் சகலசித்து மாடலாகும்.
                      -அகத்தியர் பரிபூரணம்1200


விளக்கம்:
மோகனத்திற்குஅடுத்தபடியாக தம்பனத்தை பற்றி சொல்கிறேன்
கேள், ஒரு புதன் கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் பச்சை
நிற வஸ்திரம் அணிந்து தென்கிழக்கு திசை நோக்கி பலாபலகையில்
அமர்ந்து கொண்டு ஒரு செம்பு தகட்டில் ஐங்கோணம் (5 ஸ்டார்)
போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் ஸ்ரீயும் என்று எழுதவும்,


தம்பனச்சக்கரம்
பின்னர் அந்த தம்பனச்சக்கரத்தினை உன் எதிரில் வைத்து அதற்கு தாமரை மலர் சாற்றி ஆதளை எண்ணை ஊற்றி விளக்கேற்றி
வைத்து முறையான பூசை பொருட்களை வைத்துக்கொண்டு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவநடு மையத்தில் குவித்து
"ஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும் சுகசுக சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 108-உரு வீதம் 48-நாட்கள்
செபித்தால் மந்திரம் சித்தியாகும். மந்திரத்தை எண்ணிகை
குறையாமல் 48 நாட்கள் செபித்தால் எட்டுவகை தம்பனமும்
சித்தியாகும். தம்பனம் ஒரு மகத்தான வித்தையாகும்.
தம்பனத்தின் அதிதேவதை இந்திரன் தம்பன சித்தியினால்
சகலசித்தும் ஆடலாம் என்கிறார் அகத்தியர்.
    
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்


அஷ்ட கர்மங்களில் இரண்டாவதாக கூறப்படும் மோகனம்
எட்டு உட்பிரிவுகளைகொண்டது, அது
மோகனத்தின் அதிதேவதை அக்கினிபகவான்
1)சர்வ மோகனம்
2)இராஜ மோகனம்
3)புருஷ மோகனம்
4)ஸ்திரி மோகனம்
5)மிருக மோகனம்
6)சொர்ண மோகனம்
7)சத்துரு மோகனம்
8)லோக மோகனம்
என்பனவாகும்.
இம்மோகனம் எட்டும் சித்திசெய்யும் முறையை இன்றைய
பதிவில் காண்போம்.

மோகனம் எட்டுக்கும் மந்திரம் -அகத்தியர்

பாரப்பா வசியமென்ற யெட்டுஞ்சொன்னேன் 
பத்திகொண்டு மோகனத்தைப் பகரக்கேளு
நேரப்பா மோகனந்தானெட்டும் நன்றாய்
 நேர்மையுடன் நின்றாட மந்திரங்கேளு
காரப்பா ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகாவென்று
 கண்ணார செபிக்கிறதோர் வகையைக்கேளு
சாரப்பா நாற்கோணம் நடுவில்விந்து
 தானெழுதி றீங்கென்று சாத்திட்டாயே.

சாத்தியதோர் சக்கரத்தை முன்னேவைத்து
 தன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
போத்தியிந்த மந்திரத்தை தினம்நூறப்பா
 புத்தியுடன் தான்செபித்து நின்றாயானால்
பார்த்திபனே மோகனந்தானெட்டும் நன்றாய்
 பத்தியுடனுன் வசமாய்ப் பதிவதாகும்
கார்த்துநன்றாய்க் கருணைபெறச்சித்தி பெற்றால்
 கண்கண்ட தெல்லாமோகனமாம் பாரே.

பாரடா மோகனத்திற் பதிவாய்நின்று
 பத்தியுடன் தான்செபித்து சுத்தமானால்
நேரடா சகலசெந்து மிருகமெல்லாம்
 நேர்மையுடனுன் முகங்கண்டபோது
வீரடா தானொடுங்கி மோகமாகும்
 வேதாந்த பூரணமே தான்தானானால்
ஆரடா உனக்கு நிகரொருவருண்டோ
 அப்பனே மோகனத்தை யறிந்துதேரே.
                -அகத்தியர் பரிபூரணம் 1200

பொருள்:
வசியம் எட்டும் சொன்னேன், அதுக்கடுத்ததாக மோகனத்தை
சொல்கிறேன் கேள்,
ஒரு திங்கள்கிழமை நாளில் ஒரு வங்கத்தகட்டில்
நாற்கோணம் போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் 'றீங்" என்று எழுதவும்.


பின்னர் இச்சக்கரத்தை பூசையில் வைத்து முல்லை பூக்களை
சக்கரத்தை சுற்றி வைத்து எதிரில் நல்லெண்ணை தீபமேற்றி
உடல் மனசுத்தியுடன்மஞ்சள் நிற ஆடை உடுத்தி மாம்பலகையில்

தெற்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு மனஓர்நிலையுடன்
"ஓம்கிலி சங்அங் றீங்ஸ்ரீ சிவ சுவாகா" என்ற மந்திரந்தை
நாளொன்றுக்கு நூறு உரு வீதம் 48 நாட்கள் செபித்தால்
இம்மோகனம் எட்டும் சித்தியாகும்.

மோகனம் சித்தியானால் உன்னைகாணும் சகல ஜீவஜந்துகளும்,
மிருங்களும், மனிதர்களும் உன்னை கண்டமாத்திரத்தில் தனது
நிலைமறந்து ஒடுங்கி உன்மீது மோகம் கொள்ளுவர்.
மோகனத்தை சித்தி செய்தவர்களை சகலத்தையும் அவர்கள்
வசமாக்கி விடுவார்கள் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை
எனலாம் என்கிறார் அகத்தியர்.

நன்றி
பகிர்வில் S.கலைசெல்வன் MA

வியாழன், 11 ஏப்ரல், 2013

வசியம் எட்டுக்கும் மந்திரம்


அஷ்ட கர்மங்களில் முதலாவதாக கூறப்படும் வசியம்
எட்டு உட்பிரிவுகளை கொண்டது. அது

1) சர்வவசியம்
2)இராஜ வசியம்
3)புருஷவசியம்
4)ஸ்த்ரீ வசியம்
5)மிருகவசியம்

6)சர்ப்ப வசியம்
7) சத்துரு வசியம்
8) லோகவசியம் என்பனவாகும்.

இந்த எட்டுவகை வசியத்திற்குமான
மூலமந்திரத்தையும் அதனை செபிக்கும் முறையினையும்
அகத்தியர் தனது பரிபூரணம்1200 என்ற நூலில் கூறியுள்ளார்.
அதைப்பற்றி இன்றைய பதிவில் காண்போம்.


    வசியம் எட்டுக்கும் மந்திரம்

கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்
கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு
வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று
வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு
காலடா முக்கோணம் நடுவில்விந்து
கருவாக லங்கெனவே சந்திரபீஜம்
ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி
அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.

செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்
செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்
மெய்யடா வசியமது சித்தியானால்
மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன்
கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன
கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.
                                       
                                              அகத்தியர் பரிபூரணம் 1200
பொருள்:
வசியம் எட்டுக்குமான மந்திரத்தைச் சொல்கிறேன் கேள்,
"ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா"
என்ற மந்திரத்தை செபிக்கும் முறை எப்படியெனில் முதலில்
ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு அதன் நடுவில்
ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்.





பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற
ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான
பூசை வைத்து அதன் நடுவில் இந்த யந்திரத்தை வைத்து முன் கூறிய
வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள்
செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும்.
மாணவனே உனக்காக இதை சொல்கிறேன் கைஅடக்கமாக
இருந்து இதன் பலனைப்பார் என்கிறார் அகத்தியர்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

அஷ்ட கர்மம் - சல்லிய முனிவர்

அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு அங்கங்களை
குறிக்கும். அவை

1) வசியம்
2) மோகனம்
3) தம்பனம்
4) உச்சாடனம்
5) ஆக்ருஷணம்
6) பேதனம்
7) வித்துவேஷணம்
8) மாரணம் என்பனவாகும்.

இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.

அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார். அதைப்பற்றி இன்றைய
பதிவிலும் இனிவரும் பதிவுகளிலும் தெளிவாக பார்ப்போம்.

அஷ்டகர்மத்திற்குரிய நாட்கள்:

ஞாயிறு  -   வசியம்
திங்கள் -    மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன்         - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்
வெள்ளி      - ஆக்ருஷணம்
சனி - மாரணம் இந்நாட்களில் அக்கர்மங்கள் செய்ய அது

சித்தியாகும்.

இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.

திசைகள்:

கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.


உடுப்புகள்:

சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.


உலோகங்கள்:

காரீயம்                  - வசியம்
வங்கம்                    - மோகனம்
பொன்                      - ஆக்ருஷணம்
செம்பு                       - தம்பனம்
வெள்ளீயம்          - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு                    -  பேதனம்
வெள்ளி                  - மாரணத்திற்கும் உகந்த உலோகங்களாகும்.


எண்ணைகள்:

பசு நெய்                          -  வசியம்
நல்லெண்ணை            - மோகனம்
வேப்பெண்ணை         - மாரணம்
புங்கெண்ணை              - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் - வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் - சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்
.


அதிதேவதைகள்:

ஈசன்                      -  வசியம்
அக்கினி               - மோகனம்
இந்திரன்             - தம்பனம்
நிருதி                    - உச்சாடனம்
வருணன்            - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன்              - பேதனம்
எமன் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய

திதேவதைகளாகும்.

மலர்கள்:

மல்லிகை   -  வசியம்
முல்லை -    மோகனம்
தாமரை -      தம்பனம்
தும்பை -       உச்சாடனம்
அரளி       -       ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய

மலர்களாகும்.

ஆசனங்கள்:

வில்வப்பலகை               -    வசியம்
மாம்பலகை                        -   மோகனம்
பலாப்பலகை                     -    தம்பனம்
நீலக்கம்பளம்                    -    உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் -   ஆக்ருசணம்
எட்டிப்பலகை                    -  வித்துவேஷனம்
மரத்தோலாடை              -பேதனம்
அத்திப்பலகை - மாரணம் முதலியன அஷ்டகர்மத்திற்குரிய

ஆசனங்களாகும்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

சனி, 30 மார்ச், 2013

உடல் கட்டு மந்திரம்

உடல் கட்டு மந்திரம்

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
 இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,

வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்
செய்ய முடியாது.