ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உரோம விருட்சம்

உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு.  இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும். அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும். இதைக்கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம்(35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும். இதை வாயில் போட்டுக்கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது. இது ஒரு கற்பம் இதனால் நரை,திரை,முப்பு,பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக்கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்துவிழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்துவிட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது. சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன. மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன.
                                                                                                                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் 
                                                                   - அறிவுமையம் -

காரியசித்தி கைகூட


செம்போத்து
  செம்போத்து கூடு கண்டுபிடித்து எடுத்து வந்து தீயில் போட்டு எரித்தால் ஒரு வேர் மட்டும் வேகாது. அதைப்பார்த்து எடுத்து பதனம் பண்ணவும்.இதை ஒருதாயத்தினுள் வைத்து அடைத்து இடுப்பு அல்லது புஜத்தில்(கை) ½¢ந்து கொண்டு சென்றால் எல்லா காரியமும் வெற்றியாகும். மேலும் சீட்டு ஆட்டம், சேவல் பந்தயம், குஸ்தி, மல்யுத்தம் என எதுவானாலும் ஜெயமாகும்.
பகிர்வில் S.கலைச்செல்வன்.B.Litt,M.A

வியாழன், 20 செப்டம்பர், 2012

மருந்து கொடுக்கத்தகாதவர்கள் -யூகி முனிவர்

 வெறி பிடித்தவன், மது குடிப்பவன்,விசுவாசம் இல்லாத பாவி, கெட்ட எண்ணம் உள்ளவன், மானம் இல்லாதவன்,பிறர் மனைவியுடன் உறவு கொள்பவன்,மூடன், செவிடன், ஊமையன்,மூக்கு அறுந்தவன்,பிறர் குடியைக் கெடுப்பவன்,கஞ்சன் - இப்படிப்பட்டவர்களுக்கு மருந்து கொடுக்கவோ, அவர்களை தீண்டவோ கூடாது என யூகிமுனிவரின் சிகிச்சா சாரத்தில் கூறப்பட்டுள்ளது.

மருந்து செய்ய உண்ண நாளறிதல்- யூகி முனிவர்




சனி, புதன், திங்கள், வெள்ளி - ஆகிய நாட்களில் மருந்துண்டால் நோய் தீராது தீமையாகும்.

செவ்வாய், வியாழன் - ஆகிய நாட்களில் மருந்துண்டால் பிணி தீரும்.

ஞாயிற்றுக்கிழமையில் மருந்து செய்து நோயாளிக்கு கொடுக்க வேண்டும் என்கிறார் யூகிமுனி.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மருத்துவரை அழைக்கும் திசைகளின் குணம் - யூகிமுனிவர்

மருத்துவரை ஒருவன் அழைக்கும்போது

கிழக்கில் இருந்து அழைத்தால்                                         - நன்று
தென் கிழக்கு, தென் மேற்க்கு ஆகிய
திசைகளில் நின்று அழைத்தால்                                     - நோயாளி இறக்கும் குறிப்பை உணர்த்தும்
மேற்க்கு நின்று அழைத்தால்                                            - நன்று
வடமேற்க்கு                                                                                  - மத்திமம்
வடகிழக்கு                                                                                      - நற்குணம் தரும்  என்கிறார் யூகிமுனிவர்

                                                                                                                                                பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                                                       -அறிவுமையம்-

மருத்துவர் அணியவேண்டிய ஆடை- யூகிமுனிவர்


          தூய்மையான வெண்மை நிற ஆடை உடுத்தி வினைதீர வேண்டுமென நினைத்து மருந்து செய்பவரே மேன்மைமிக்க மருத்துவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்,
இவர்கள் பல நூல்களை கற்றுத்தேர்ந்தவர் என்பதை கண்டுகொள்ளலாம் என்கிறார் யூகிமுனிவர்.
                                                                                                                            பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                              -அறிவுமையம்-

சனி, 15 செப்டம்பர், 2012

கல்வத்தின் அளவும் அமைப்பும்-அகத்தியர்


சித்த மருத்துவத்தில் மருந்துகளை அரைக்க பயன்படும் கல்வம் மிக முக்கியமானது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வத்தை எந்த அளவில் அமைக்கவேண்டும் என அகத்தியர் தனது பெருநூல் காவியத்தில் கூறியுள்ளார். அதைப்பற்றி இப்பக்கத்தில் விரிவாகப் பார்ப்போம்.

ஆமேதான் பண்டிதற்குக் கல்வம் சொல்வேன்
அப்பனே புலஸ்தியனே புத்திவானே
தாமேதான் நீளமது சொல்லக்கேளு
சாற்றுகிறேன் அங்குலந்தான் பதினாறாகும்
நாமேதான் அகலமது வாறதாகும்
வலமான குழியாமது வாழஞ்சொல்வேன்
போமேதான் வங்குல மிரண்டதாகும்
பொலிவான நன்னியென்ற கல்லுமாமே


கல்லான கல்லதுதான் சொல்லக்கேளு
கருக்குருந்தை செங்குருந்தை நன்னியாகும்
சொல்லுவேன் சாற்றோரம் வரம்புகம்பி
திரண்ட வங்குலமதுதான் வொன்றேயாகும்
வல்லசித்தர் சொற்படியே புலிமுகமும் வைத்து
வளமையுடன் சித்தரித்து வண்மையாக
புல்லறிவால் கல்லமைத்துச் செய்யும் யோகங்
பூதலத்தில் தேவவயித்தியானான் பாரே.
                          

                                          -அகத்தியர் பெருநூல் காவியம்
பொருள்:
சித்த மருத்துவர்க்கு பயன்படும் கல்வத்தை பற்றி சொல்கிறேன் புலத்தியனே கேளு,
கல்வத்திற்க்கு நீளமானது - 16 அங்குலம்
அகலம்                                              - 6 அங்குலம்
குழி ஆழத்தின் அளவு            - 2 அங்குலம்
விளிம்பின் அளவு                    - 1 அங்குலம்
                    -என்ற அளவில் நல்ல பொலிவான நன்னியென்ற திடமான கல் வகையில் கருங்கல் அல்லது சிவப்பு கல்லை தேர்ந்தெடுத்து கல்வம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் கல்வத்தின் முகப்பில் வல்லமையுடய சித்தர்கள் சொன்னபடி புலிமுகம் சித்தரித்து கல்வத்தை அமைக்கவேண்டும். மேற்சொல்லிய அளவு முறைப்படி நுண்ணிய அறிவோடு கல்வம் அமைத்து வைத்தியம் செய்பவன் உலகத்தில் தேவ வைத்தியனாவான் என்கிறார் அகத்தியர்.
                                                                                                                 பகிர்வில் சு.கலைச்செல்வன்
                                                        -அறிவு மையம்-